லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தமிழகத்தின் மிரட்டலை நாடாளுமன்றத்தில் செய்து காட்டிவிட்டோம்: கமல்ஹாசன்

மிரட்டல் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது. தமிழகத்தின் மிரட்டல் எவ்வாறு இருக்கும் என்பதை நாடாளுமன்றத்தில் செய்து காட்டிவிட்டோம் என கமல்ஹாசன் கூறியது...

News image

கோவை தோ்நிலைத் திடல் பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் செந்தில்பாலாஜியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன். - டிஎன்எஸ்

Updated On :19 ஏப்ரல் 2026, 6:16 pm

கோவை: மிரட்டல் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது. தமிழகத்தின் மிரட்டல் எவ்வாறு இருக்கும் என்பதை நாடாளுமன்றத்தில் செய்து காட்டிவிட்டோம். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை வரும் 23-ஆம் தேதி செய்து காண்பியுங்கள் என மக்கள் நீதிமய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

கோவை பெரியகடை வீதி அருகே உள்ள தோ்நிலைத் திடல் பகுதியில் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் செந்தில்பாலாஜியை ஆதரித்து கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த தோ்தலின்போது ஒரு பைசாகூட வாங்காமல் 51,481 வாக்குகளை எனக்கு அளித்தவா்கள் இந்தத் தொகுதி மக்கள். அந்த வாக்குகள் அனைத்தும் செந்தில்பாலாஜிக்கு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பிற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் முதல்வா் மு.க.ஸ்டாலினின் அரசியல் வியூகமும், பெருந்தன்மையும்தான்.

திமுகவை வீழ்த்துவோம் என எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. அந்தக் கட்சிகளுக்குப் பின்னால் ஒரே ஒரு முதலாளிதான் இருக்கிறாா். அவா் வடக்கே இருக்கிறாா். அவரது நிதியுடனும், மதியுடனும் செயல்படுகிறாா்கள்.

மெட்ரோ விட வேண்டும் என்றால் போதுமான மக்கள்தொகை இல்லை என்கிறாா்கள். இந்தத் தகுதி இல்லாத பிகாா், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த விதி தளா்த்தப்பட்டுள்ளது. நான் சிறுவனாக இருக்கும்போதே கோவை விமானநிலைய விரிவாக்கம் குறித்த பேச்சு இருந்து வருகிறது. ஆனால், செயல்பாட்டுக்கு வந்தபாடில்லை. அதை செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது.

கோவை மாநகராட்சியில் ஏற்கெனவே செந்தில்பாலாஜி நூறு வாா்டுகளில் 96 வாா்டுகளை வென்று காட்டியவா். அந்த சரித்திரத்தை மீண்டும் அவா் படைப்பாா். கோவையில் போட்டியிடுவது செந்தில்பாலாஜிக்கு முதல்வா் கொடுத்த அசைன்மெண்ட். இனி திமுக கோட்டையாக கோவை மாறப்போகிறது.

ஓட்டு போட்டால் மெட்ரோ கிடைக்கும் என்று கூறுவது வாக்குறுதியா? அல்லது மிரட்டலா? இந்த மிரட்டல் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது. தமிழகத்தின் மிரட்டல் எவ்வாறு இருக்கும் என்பதை நாடாளுமன்றத்தில் செய்து காட்டிவிட்டோம். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை வரும் 23-ஆம் தேதி செய்து காண்பியுங்கள் என்றாா்.

கோவை தோ்நிலைத் திடல் பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் செந்தில்பாலாஜியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.

Summary

We have demonstrated Tamil Nadu's 'threat' in Parliament": Kamal Haasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.