தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா!

தம்மம்பட்டி சிவன் கோயில் விழாக்களுக்கு காரணமாக இருந்து வரும் தலைமை ஆசிரியருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா தொடர்பாக...
தலைமை ஆசிரியர் கி.ஹரி ஆனந்த்திற்கு, மலர் கிரீடம், பொன்னாடை அணிவித்தும், விழா நாயகன் விருது என்ற விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் கி.ஹரி ஆனந்த்திற்கு, மலர் கிரீடம், பொன்னாடை அணிவித்தும், விழா நாயகன் விருது என்ற விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

தம்மம்பட்டி: தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயிலின் திருப்பணிகளுக்கும், ஆண்டு முழுவதும் நடந்து வரும் விழாக்களுக்கு காரணமாக இருந்து வரும் ஆன்மீக வழிகாட்டியும் தலைமை ஆசிரியருமான கி. ஹரி ஆனந்த்தினை கௌரவிக்கும் விழா சிவன் கோயில் மண்டபத்தில் கோயில் அறங்காவலர்கள், திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் மக்கள் சார்பாகவும் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதற்கு அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். திருப்பணி குழுத் தலைவர் திருச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான கோயில் திருப்பணிக்கு மூளையாக இருந்து செயல்பட்டவரும், குடமுழுக்கு நடந்த பிறகு, கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் தொடர்ந்து நடப்பதற்கு காரணமாக இருந்து வரும் தலைமை ஆசிரியர் கி.ஹரி ஆனந்த்திற்கு, மலர் கிரீடம், பொன்னாடை அணிவித்தும், விழா நாயகன் விருது என்ற விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவில் கோயில் வளர்ச்சிக்கு உதவி வரும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Summary

A felicitation ceremony for the headmaster!

தலைமை ஆசிரியர் கி.ஹரி ஆனந்த்திற்கு, மலர் கிரீடம், பொன்னாடை அணிவித்தும், விழா நாயகன் விருது என்ற விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்! நாளை ஆருத்ரா தரிசனம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com