ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் அசத்தல் சதம்... வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளதைப் பற்றி...
டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித்.
டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித்.படம்: ஏபி
Updated on
2 min read

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.

முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அபார வெற்றிபெற்று தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, மெல்பர்னில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியிடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி சர்வதேச கிரிக்கெட் திடலில் நேற்றுமுன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 97.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 384 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் குவித்தார். அதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட், இந்தத் தொடரில் மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து ஆடிய மைக்கேல் நெசர் 24 ரன்களிலும், மார்னஸ் லபுசேன் 48 ரன்களிலும், ஜேக் வெதரால்டு 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து 24 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 163 ரன்கள் எடுத்த டிராவிஸ் ஹெட் பெவிலியன் திரும்பினார். உஸ்மான் கவாஜா 17 ரன்களிலும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 16 ரன்களிலும், கேமரூம் கிரீன் 37 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்

3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 124 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 518 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடி காட்டிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 15 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 129 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இது ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச அளவில் 37 வது சதமாகவும் அமைந்தது.

ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட்
ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட்

பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும், டங், பெத்தேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

Travis Head and Steve Smith starred as Australia took control on Day 3 of the final Test in Ashes 2025-26 at SCG. Their centuries and England's fielding errors have tilted the contest firmly in Australia's favour.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com