தங்கமயில் ஜூவல்லரியில் நாளை முதல் வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை

தங்கமயில் ஜூவல்லரியில், வசந்த பஞ்சமி திருநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(ஜன. 23) முதல் 4 நாள்களுக்கு சிறப்பு விற்பனை மற்றும் தள்ளுபடி சலுகைகள் தொடர்பாக...
தங்கமயில் ஜூவல்லரி
தங்கமயில் ஜூவல்லரி
Updated on
1 min read

சென்னை: மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரியில், வசந்த பஞ்சமி திருநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(ஜன. 23) முதல் 4 நாள்களுக்கு சிறப்பு விற்பனை மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தை அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி திதி, வசந்த பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவி அவதரித்த இந்நாளில், மங்களத்தின் அடையாளமான தங்கம் வாங்குவது மிகுந்த சௌபாக்கியத்தைத் தரும் என்பது நம்பிக்கை.

இதனை முன்னிட்டு, வாடிக்கையாளா்களுக்கு வெள்ளி (ஜன. 23) முதல் திங்கள்கிழமை (ஜன. 26) வரை சிறப்புச் சலுகைகளை தங்கமயில் ஜூவல்லரி அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு விற்பனையில், தங்கச் செயின்களுக்கு 1.99 முதல் 5.99 சதவீதம்வரை மட்டுமே சேதாரம் கணக்கிடப்படும். அதேபோல், மாலை, நெக்லஸ், வளையல்களுக்கு 7.99 முதல் 13.99 சதவீதம்வரை சேதாரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் கட் வைர நகைகளுக்கு காரட்டிற்கு ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளிப் பொருள்களுக்கு கிலோவிற்கு ரூ. 5,000 முதல் ரூ.8,000 வரையிலும், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கு 5 முதல் 30 சதவீதம் வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வாடிக்கையாளா்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆபரணங்களை லாபகரமான விலையில் வாங்கி மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Special Vasant Panchami sale at Thangamayil Jewellery from tomorrow

தங்கமயில் ஜூவல்லரி
‘எடா்னல்’ குழும சிஇஓ தீபிந்தா் கோயல் பதவி விலகல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com