பிராட்வே பேருந்து நிலையம் மறுசீரமைப்பு: இன்று முதல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்து இயக்கம்!

ராயபுரம், தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்தில் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்Center-Center-Chennai
Updated on
2 min read

பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை முதல்(ஜன.24) முதல் ராயபுரம், தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்தில் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சனிக்கிழமை முதல் (ஜன.24) பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும்.

ராயபுரம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம்

அண்ணாசாலை மற்றும் ஈவெரா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள்

பேருந்து புறப்படும் இடத்திலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் போது ஏற்கனவே அமைந்துள்ள நர்ஸ் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்திலும், வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்ததிலும் நின்று பயணிகளை இறக்கி, ராஜாஜி சாலை வழியாக ராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

ராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், வடக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

அண்ணாசலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்:

11, 21, 26, 52, 54, 60, 10இ, 11ஜி, 11எம், 155ஏ, 17இ, 17கே, 188சி, 188இ.டி., 18ஏ, 18ஏ சியுடி, 18பி, 18டி, 18இ, 18கே, 18பி, 18ஆர், 18ஆர் எக்ஸ், 18எக்ஸ், 21சி, 26பி, 26ஜி, 26கே, 26எம், 26ஆர், 51டி, 51ஜெ, 52பி, 52ஜி, 52கே, 54ஜி, 54எல், 5சி, 60ஏ, 60டி, 60ஜி, 60எச், 88சி, 88கே, 88கே இ.டி., 9எம் இ.டி., ஏ51, டி51 இ.டி., இ18, இ51, எம்51ஆர்.

ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 50, 101சிடி, 101எக்ஸ், 53இ, 53பி, 71டி, 71இ, 71எச், 71வி, 120, 120சிடி, 120எப், 120ஜி, 120கே, 150.

தீவுத்திடல் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் தடங்கள் விவரம்:

ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 155, 156, 17டி, 20ஏ, 20டி, 50இ.டி., 50எம்.

வேப்பேரி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்:

35,42, 242, 142பி,35சி, 42பி, 42சி, 42டி, 42எம், 64சி, 64கே, 64கே, இடி, 7இ, 7எச், 7கே, 7எம், 7எம் இடி

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் தடங்கள்:

6, 13, 60இ, 102, 109, 102சி, 102கே, 102பி, 102எஸ், 102எக்ஸ், 109ஏ, 109எக்ஸ், 21ஜி, 21எல், 21இ இடி.

கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள்:

1, 4, 44, 330, 33எல், 38ஏ, 38ஜி, 38எச், 44சி, 44சிடி, 4எம், 560, 56டி இ.டி., 56ஜெ, 56கே, 56பி, 570, 57எப், 57எச், 57ஜெ, 57எம், 8பி, சி56சி, சி56சி இ.டி., 557ஏ இ.டி.,

மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33பி, 56சி, 56எப்.

ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ஏற்கனவே அமைந்துள்ள நர்ஸ் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி வலதுபுறம் திரும்பி முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரீஸ் கார்னர் சிக்னல், வடக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது எஸ்பிளனேடு சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள பாரிஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி என்.எஸ்.சி.போஸ் சாலை, எஸ்பிளனேடு சாலை வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

தீவுத்திடலில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி எஸ்பிளனேடு சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள ரங்கவிலாஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

Summary

Broadway bus station renovation: Bus services to operate from Royapuram and Island Grounds from today!

கோப்புப்படம்
சாலை விபத்துகளில் தினமும் 48 போ் இறப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com