வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்புபொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!திருச்சியில் முதல்வா் விஜய்யின் நிகழ்ச்சியில் கட்டுப்பாடுகள்!16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
/

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு! - ஐஐடி தில்லி மண்டலம் முதலிடம்!!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மொத்தமாக 56,880 தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளது குறித்து...

News image

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 10:34 am IST

கடந்த மே 17 ஆம் தேதி நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மொத்தமாக 56,880 தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மொத்த தேர்வர்களில் 10,107 பேர் பெண் தேர்வர்கள் ஆவர்.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) இளநிலை பொறியியல் படிப்பில் சோ்ந்து பயில்வதற்காக ஜேஇஇ மெயின் தோ்வு கடந்த மே 17 ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 1,87,389 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,79,694 லட்சம் போ் முதல் மற்றும் இரண்டாம் தாள்களை எழுதினர்.

இதற்கான முடிவுகள் இன்று(ஜூன் 1) இணையத்தில் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் https://jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஜேஇஇ தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இந்த மதிப்பெண் அட்டையில், தேர்வரின் பெயர், தகுதி நிலை, அகில இந்திய தரவரிசை, பாட வாரியான மதிப்பெண்கள், பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள், பிரிவு வாரியான தரவரிசை மற்றும் கட்-ஆஃப் குறித்த தகவல்கள் போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

முதல் மூன்று இடங்களை பெற்ற ஐஐடி தில்லி மண்டலம்

இதில், அகில இந்திய அளவில் ஐஐடி தில்லி மண்டலத்தைச் சேர்ந்த சுபம் குமார், 360 மதிப்பெண்களுக்கு 330 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வில் மொத்தம் 56,880 பேர் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மொத்த தேர்வர்களில் 10,107 பேர் பெண் தேர்வர்கள் ஆவர்.

ஐஐடி தில்லி மண்டலத்தைச் சேர்ந்த ஆரோஹி தேஷ்பாண்டே, 360-க்கு 280 மதிப்பெண்கள் பெற்று பெண் தேர்வர்களிடையே முதலிடத்தைப் பிடித்தார். அவர் பொதுத் தரவரிசைப் பட்டியலில் 77-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

கபீர் சில்லர் 329 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜதின் சஹார் 319 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்த தேர்வர்கள் அனைவரும் ஐஐடி தில்லி மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஐஐடி ரூர்க்கி இயக்குநர் வாழ்த்து

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வில் தகுதி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஐஐடி ரூர்க்கி இயக்குநர் பேராசிரியர் கமல் கிஷோர் பந்த், இந்தச் சாதனை அவர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கல்விசார் சிறப்பிற்குச் சான்றாகத் திகழ்கிறது.

தகுதி பெற்ற அனைத்து தேர்வர்களும், தங்கள் 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான மதிப்பெண்கள் எவ்வாறிருப்பினும், கலந்தாய்வு மற்றும் இட ஒதுக்கீடு செயல்முறையில் பங்கேற்குமாறு ஊக்குவித்துள்ளார்.

"எனினும், இறுதிச் சேர்க்கையானது, ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தகவல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சதவீத அடிப்படையிலான தகுதித் தேவைகள் மற்றும் பிற பொருந்தக்கூடிய நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு உள்பட்டதாகவே இருக்கும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.