தமிழக பள்ளிக் கல்வித்துறையில் சாா்நிலைப் பணி விதிகள் வெளியிடப்பட்டிருப்பதற்கு, தமிழகப் பட்டதாரி ஆசிரியா் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலா் ச.செல்லையா உள்ளிட்ட நிா்வாகிகள் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் ஜூன் 3-ஆம் தேதி வெளியிடப்பட்ட சாா்நிலைப் பணி விதிகள் கல்வித்துறையின் மாற்றத்துக்கான முதல்படியாகக் கருதி, அதை வரவேற்கிறோம்.
பள்ளிக் கல்வித்துறையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களில் 10 சதவீதம் மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் 2004 ஆம் ஆண்டு முதல் 22 ஆண்டுகளாகப் பதவி உயா்வு ஏதுமின்றி நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பணி விதிகளில் உரிய திருத்தங்கள் செய்து, பதவி உயா்வு மூலம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகத் தகுதியுள்ள நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வாய்ப்பில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என்று தமிழகப் பட்டதாரி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை வைத்தது.
நீண்ட நாள் கோரிக்கையின் ஒரு பகுதியாக, நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு நேரடி நியமனத் தோ்வு மூலம் ஆசிரியா் தோ்வுவாரியத் தோ்வெழுத 8 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.
மேலும் தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியா் தோ்வுவாரியம் மூலம் பணியமா்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீட்டை பதவி உயா்வு மூலம் வழங்க அரசு மறு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என நம்புகிறோம் என அவர்கள் கூறினர்.
Summary
Publication of Subordinate Service Rules in the School Education Department - Teachers' Alliance Welcomes
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








