தவெகவிற்கு விசிக ஆதரவு அளிக்கிறதா என்பதை சனிக்கிழமை காலை(மே 9) அறிவிப்பதாக தொல். திருமாவளவன் தெரித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் கூறியதாவது:
தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது எனது பொறுப்பு. இன்று மாலை (மே 8) கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அந்த கூட்டத்தில் சமீபத்திய அரசியல் நெருக்கடி குறித்து முன்னணி தோழர்களோடு கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என நாங்கள் அறிவித்திருக்கிறோம்.
அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இணையவழி உயர்நிலைக் குழு கூடுகிறது.
ஜனநாயக முறைப்படி கட்சியில் பேசுவது என்பது வழக்கமான ஒன்றுதான். எந்தவொரு முடிவாக இருந்தாலும் கட்சித் தலைவர் என்கிற முறையில் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், நிர்வாகிகளின் கருத்துகளை அறிய வேண்டியது, அவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டியது எனது பொறுப்பு, கடமை. ஆகவே, இன்று மாலை 5 மணியளவில் இணையவழியாக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
உயர்நிலைக்குழு கூட்டத்துக்கு பின்னர் எங்களது முடிவை நாளை(மே 9) செய்தியாளர்கள் சந்திப்பில் முறைப்படி அறிவிப்போம் என்றார்.
மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார்?
மேலும், திமுக கூட்டணி மக்களின் தீர்ப்பை மதிக்கிறது. தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க இடையூறாக இருக்க மாட்டோம். மக்களுடைய தீர்ப்பை தலைவணங்க வேண்டியது நமது கடமை என மு.க. ஸ்டாலின் கூறியதாக திருமாவளவன் தெரிவித்தார்.
தவெகவுக்கு விசிக ஆதரவளித்தால் அதற்கு திமுக தலைவர் இடையூறு தராமல் இருப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இது ரொம்ப அதிதமான, யூகமான கேள்வி. நாங்கள் இன்னும் எங்கள் நிலைப்பாட்டை எடுக்கவே இல்லை. எடுக்காதபோது நீங்கள் ஒரு யூகமான கேள்வி கேட்பது சரியல்ல. எங்களது முன்னணி தோழர்களோடு கலந்து பேசி அதன்பிறகு நாங்கள் எடுக்கும் முடிவையொட்டி நீங்கள் கேள்வி எழுப்பலாம் என்று அவர் கூறினார்.
Summary
Thol. Thirumavalavan stated that the VCK would announce on Saturday morning (May 9) whether it is extending its support to the TVK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெகவுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? திருமாவளவன் பதில்!
தவெகவுக்கு விசிக ஆதரவு? திருமாவளவன் நாளை ஆலோசனை!
தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
திமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை



