ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் எஸ்.வி. சொகுசுக் காரின் விலை ரூ. 75 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான சுதந்திர வணிக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கார் விலைக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சூழலுக்கு ஏற்ப சொகுசுக் கார்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் மேம்பட்ட பயனாளர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.
இதனிடையே இந்தியா - இங்கிலாந்து இடையிலான தடையற்ற சுதந்திர வணிக ஒப்பந்தத்தால் ரேஞ்ச் ரோவர் எஸ்.வி. மாடல் காரின் விலை ரூ. 4.25 கோடியில் இருந்து ரூ. 3.50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரேஞ்ச் ரோவர் எஸ்.வி. மாடல் காரின் விலை ரூ. 75 லட்சம் குறைந்துள்ளது.
இதேபோன்று ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி. மாடல் காரின் விலை ரூ. 2.75 கோடியில் இருந்து, ரூ. 2.35 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சி.பி.யூ., மாடல்களுக்கு மட்டுமே இந்த விலைக் குறைப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Jaguar Land Rover India has significantly reduced prices for top-tier Range Rover SV
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஜேபியின் உள்கட்டமைப்பு கட்டணங்கள் குறைப்பு: தில்லி அரசு

விற்ற காா் சட்டவிரோத பயன்பாடு விவகாரம்: நடவடிக்கையிலிருந்து மனுதாரருக்கு உயா்நீதிமன்றம் பாதுகாப்பு

எஸ்.வி. பிரணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



