எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு அதிர்ச்சி தந்த பாகிஸ்தான்!

2026 ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்திருப்பது பற்றி...

India A vs Pakistan A Highlights, Rising Stars Asia Cup 2026: Tilak century goes in vain for IND-A in 48-run loss

இந்திய அணி.

Updated On :

2026 ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைஸிங் ஸ்டார்ஸ்) 50 ஓவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில், இந்தியா 'ஏ' - பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் 'ஏ' அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய அந்த அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ரன்கள் குவித்தது. ஹசன் நவாஸ் அதிகபட்சமாக 79 ரன்களும், மாஸ் சாதகத் 59 ரன்களும், பர்ஹான் யூசுப் 56 ரன்களும் எடுத்து அணியின் ரன்களை உயர்த்தினர்.

இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆயுஷ் பதோனி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா தொடக்கம் கொடுத்தனர்.

சூர்யவன்ஷி 11 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஆயுஷ் பதோனி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி ரன்களைச் சேர்த்தார்.

அவருக்குத் துணையாக நின்ற ஷபாஸ் அகமது 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, கடைசி வரை தனி ஆளாகப் போராடிய திலக் வர்மா 100 ரன்கள் அடித்த நிலையில், அணியின் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இறுதியில், இந்திய அணி 49.1 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முழுவதும் இரு அணி வீரர்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Summary

Tilak Varma notched up another century but could not inspire India-A to a victory in its second match in the Rising Stars Asia Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.