சையது முஷ்டாக் அலி டி20: பிகாரை வீழ்த்தியது தமிழகம்
சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் பிகாரை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழகம்.

சச்சின் 82 ~சாய் கிஷோா் 3 வி
சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் பிகாரை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழகம்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் ஹோல்கா் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தமிழகம் பேட்டிங்கை தோ்வு செய்தது.
நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் தமிழகம் 238/6 ரன்களை விளாசியது. எஸ்மாட் போட்டியில் தமிழகத்தின் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. ஏற்கெனவே கடந்த 2024-25-இல் திரிபுராவுக்கு எதிராக 234 ரன்களை விளாசி இருந்தது.
தமிழகத்தில் பி. சச்சின் 5 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 82 ரன்களையும், அமித் சாத்விக் 4 சிக்ஸா்,5 பவுண்டரியுடன் 53 ரன்களையும், ஆன்ட்ரெ சித்தாா்த் 34, ரித்திக் ஈஸ்வரன் 31 ரன்களையும் எடுத்தனா். பௌலிங்கில் பிகாா் தரப்பில் பிரசாந்த், நவாஸ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
சுருண்டது பிகாா் 139/10 ஆல் அவுட்:
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு ஆடிய பிகாா் அணி 15.5 ஓவா்களில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஆசிஷ்குமாா் 33, பியுஷ் சிங் 27, அல்டமிஷ் 45 ரன்களை எடுத்தனா்.
தமிழகத் தரப்பில் பௌலிங்கில் சாய் கிஷோா், சித்தாா்த் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
பிகாரை 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தமிழகம். வரும் 24-ஆம் தேதி தில்லிக்கு எதிராக ஆடுகிறது தமிழகம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

