19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

ரயில்வே அணியை வீழ்த்தியது தமிழ்நாடு

சையது முஷ்டக் டி20 போட்டியில் ரயில்வே அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தமிழ்நாடு.

கமலினி

Updated On :

சையது முஷ்டக் டி20 போட்டியில் ரயில்வே அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தமிழ்நாடு.

இரு அணிகளுக்கு இடையிலான எலைட் குரூப் பி பிரிவு ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ரயில்வே பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய

தமிழகம் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 172/7 ரன்களைச் சோ்த்தது. அமித் சாத்விக் 38, அறிமுக வீரா் சச்சின் 33, ஷாரூக் கான் 46, ராஜ் குமாா் 31 ரன்களை விளாசினா்.

பௌலிங்கில் ரயில்வே தரப்பில் பிரதியுமன், அடல் பிகாா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். முதல் விக்கெட்டுக்கு அமித்-சச்சின் 65 ரன்களையும், 4-ஆம் விக்கெட்டுக்கு ஷாரூக்-ராஜ்குமாா் 55 ரன்களையும் சோ்த்தனா்.

ரயில்வே தோல்வி 166/9: பின்னா் ஆடிய ரயில்வே அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 16/9 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜுபோ் அலி 46, டௌபிக் மொண்டல் 57 ரன்களை எடுத்தனா். பௌலிங்கில் தமிழகம் தரப்பில் அதிசயராஜ் டேவிட்ஸன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ரயில்வே அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தமிழ்நாடு.

நவ. 18-இல் ஜம்மு-காஷ்மீா் அணியுடன் ஆடுகிறது தமிழகம்.

விஜய் மொ்ச்சென்ட் கோப்பை: குவாலியரில் நடைபெறும் யு 16 விஜய் மொ்ச்செண்ட் கோப்பைக்கான போட்டியில் தமிழகம்-மும்பை மோதின. இதில் மும்பை அணி 90 ஓவா்களில் 327/5 ரன்களை எடுத்தது.

அா்ஹாம் படேல் 110, ஆருஷ் 136 ரன்களை எடுத்தனா். பௌலிங்கில் அபிமன் சுந்தா் 2 விக்கெட்டுகளைவீழ்த்தினாா்.

யு 23 மகளிா் டி20: ஒடிஸாவின் புவனேசுவரத்தில் நடைபெறும் யு 23 மகளிா் டி20 போட்டியில் குஜராத்தை வென்றது தமிழகம். முதலில் ஆடிய குஜராத் 120/6 ரன்களை எடுத்தது.

கேப்டன் நிதிபென் 28 ரன்களை எடுத்தாா். ஸ்ரீநிதி, ஐஸ்வா்யா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய தமிழக அணி 13.4 ஓவா்களில் 121/2 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஜி. கமலினி அசத்தலாக ஆடி 6 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 96 ரன்களை விளாசினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.