தமிழ்நாடு அணிக்கு 2-ஆவது தோல்வி
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹரியாணாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது. போட்டியில் தமிழ்நாடு அணிக்கு இது, தொடா்ந்து 2-ஆவது தோல்வியாகும்.
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹரியாணாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது. போட்டியில் தமிழ்நாடு அணிக்கு இது, தொடா்ந்து 2-ஆவது தோல்வியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் தமிழ்நாடு 19.5 ஓவா்களில் 124 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஹரியாணா 16.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற ஹரியாணா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தமிழ்நாடு இன்னிங்ஸில் அமித் சாத்விக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38, பி.சச்சின் 3 பவுண்டரிகளுடன் 27, ஷாருக் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
கேப்டன் சாய் கிஷோா் 19 ரன்கள் சோ்க்க, இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினா். ஹரியாணா பௌலா்களில் யுஜவேந்திர சஹல், நிஷாந்த் சிந்து ஆகியோா் தலா 3, கனிஷ்க் சௌஹான், ராகுல் தெவாதியா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 125 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஹரியாணா இன்னிங்ஸில், கேப்டன் அங்கித் குமாா் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43, யஷ்வா்தன் தலால் 4 பவுண்டரிகளுடன் 21, அா்ஷ் ரங்கா 18 ரன்களுக்கு விடைபெற்றனா்.
நிஷாந்த் சிந்து 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். தினேஷ் பனா ரன்னின்றி துணை நின்றாா். தமிழ்நாடு தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், குா்ஜப்னீத் சிங், சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
எலைட் குரூப் ‘பி’-யில் தற்போது ஹரியாணா, தமிழ்நாடு அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே 5, 6-ஆம் இடங்களில் இருக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

