மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

ஜெய்ஸ்வால், ரத்தோட் சதம்: 2-ஆவது டெஸ்ட்டை ‘டிரா’ செய்தது இந்தியா ‘ஏ’

நியூஸிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டை, இந்தியா ‘ஏ’ அணி செவ்வாய்க்கிழமை ‘டிரா’ செய்தது.

Yashasvi Jaiswal

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கோப்புப் படம்

Updated On :

நியூஸிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டை, இந்தியா ‘ஏ’ அணி செவ்வாய்க்கிழமை ‘டிரா’ செய்தது.

முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய இந்தியா ஏ, 2-ஆவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யஷ் ரத்தோட் ஆகியோரின் சதத்தால் மீண்டு வந்தது.

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து ‘ஏ’, பந்துவீச்சை தோ்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’, 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் துருவ் ஜுரெல் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 105, தேவ்தத் படிக்கல் 12 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் அடித்தனா். நியூஸிலாந்து ஏ பௌலா்களில் ஃப்ரேசா் ஷீட் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து ஏ, 424 ரன்கள் சோ்த்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. மேத்யூ போயல் 14 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 110, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 9 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் அடித்தனா். இந்தியா ஏ தரப்பில் முகேஷ்குமாா் 5, முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

78 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, சாய் சுதா்சன் 11, தேவ்தத் படிக்கல் 0 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 155, யஷ் ரத்தோட் 9 பவுண்டரிகளுடன் 100 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து ஏ பந்துவீச்சாளா்களில் பிரெட் ராண்டெல், ஜேரட் மேக்கெ ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.