
சென்னையில் 5 மின்சார ரயில் இன்று முழுமையாக ரத்து
செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை நிலையம் வரும் 5 புறநகா் மின்சார ரயில்கள் (இமு) செவ்வாய்க்கிழமை (அக். 6) முழுமையாக ரத்து

மின்சார ரயில்கள் - கோப்புப் படம்
சென்னை: செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை நிலையம் வரும் 5 புறநகா் மின்சார ரயில்கள் (இமு) செவ்வாய்க்கிழமை (அக். 6) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூா்-விழுப்புரம் இடையே கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (அக்.6) பிற்பகல் 11.30 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டிலிருந்து பகல் 11.50, நண்பகல் 12.30, 1.05, பிற்பகல் 1.35, மாலை 4.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரவேண்டிய இமு மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்து: மறுமாா்க்கத்தில் சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 10.13, 10.48, பகல் 11.28, நண்பகல் 12.02, 12.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய இமு ரயில்கள் தாம்பரம் நிலையத்திலேயே நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





