வீட்டுக்குள் எப்போதாவது எதிர்பாராத வகையில், கரப்பான் பூச்சி, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் நுழைந்துவிடும். பலரும் அதனைப் பார்த்ததுமே அடித்து வெளியேப் போட்டுவிடுவார்கள்.
பிறகு, ஏன் இந்த விஷப் பூச்சிகள் வீட்டுக்குள் வந்தன என்று யோசிப்பார்கள். வீட்டுக்குள் இருக்கும் பொருள்களா, வெளிக் காரணிகளா, இவை வீட்டுக்குள் வந்ததால், ஏதேனும் தீங்கு நேரிடுமா என்றெல்லாம் மனதுக்குள் குழப்பங்கள் ஏற்படும்.
பொதுவாகவே, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் வீட்டுக்குள் வருகிறது என்றால், வீட்டுக்குள் இருக்கும் ஈரப்பதம் முக்கிய காரணியாகும். வீட்டின் குளியலறை போன்றவற்றில்தான் அதிகம் காணப்படும். அதுபோல இருட்டாக இருப்பதும் பூரான் வரக் காரணம் என்று கூறப்படுகிறது.
வீட்டுக்குள் சிறு பூச்சிகள் அதிகமாக இருந்தால், அவற்றை உணவாக சாப்பிட பூரான் வருவதுண்டு. எனவே வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் தேவையற்ற பொருள்களை தூக்கி எறிந்துவிட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வெளியில் அதிகமாக வெய்யில் இருக்கும்போது, வீடு குளிர்ச்சியாக இருந்தால், மழைக் காலத்தில் பாதுகாப்பு தேடியும் வீட்டுக்குள் பூரான் வருவதற்கு காரணமாக இருக்கலாம்.
நம்பிக்கை என்ன?
வீட்டுக்குள் பூரான் வருவது குறித்து சில ஜோதிட நம்பிகைககள் உள்ளன. வீட்டுக்குள் ஏற்படவிருக்கும் சில மாற்றங்கள், வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களின் அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
மிகவும் ஆழமாகப் பார்த்தால், சில ஜோதிட நிபுணர்கள் வீட்டுக்குள் பூரான் வருவது, ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களின் தாக்கத்தால் என்று கூறுவதாகவும் சொல்லப்படுகிறது.
முக்கியமாக, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் குழந்தைகளுக்கு ஆபத்தானது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் அவற்றைப் பிடித்து வெளியில் விடுவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூலை 31 - ஆக. 6) - மேஷம்

ஜூலை மலா்களால் அதிகரித்த வண்ணத்துப் பூச்சிகள்!

குடியிருப்புப் பகுதியில் பூச்சிகள் தொல்லை: கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

குன்னூா் பகுதியில் பூச்சிகள் பரவலைக் கட்டுப்படுத்தக் கோரி கடையடைப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



