
பேச்சுலர் அறைகளுக்கான டிரீட்! சார்ஜ் ஹப் பற்றி தெரியுமா?
பேச்சுலர் அறைகளுக்கான டிரீட்டாக வந்திருக்கும் சார்ஜ் ஹப் பற்றி...

சார்ஜ் ஹப்
வீட்டில் ஒரே நேரத்தில் 7 பொருள்களுக்கு சார்ஜர் போடும் வகையில் சார்ஜ் ஹப் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது, ஒரே அறையில் தங்கியிருக்கும், இளைஞர், இளைஞிகளுக்கான ட்ரீட் இதுதான் என்கிறார்கள் இதைப் பற்றி அறிந்தவர்கள்.
ஆம்ரான் சார்ஜ் ஹப் 140 என்பது 140W GaN சார்ஜிங் ஹப் ஆகும். இதில் 5 டைப்-C இணைப்புப் போர்ட்கள் மற்றும் 2 யுஎஸ்பி-ஏ போர்ட்கள் உள்ளன, இதன் மூலம் ஒரே மின் இணைப்பில் (outlet) 7 சாதனங்கள் வரை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம்.
இது 100W டைப்-C லேப்டாப் சார்ஜிங்குக்கும் உதவுகிறது. எனவே மேக் புக் (MacBooks) மற்றும் பிற யுஎஸ்பி-சி லேப்டாப்கள் மட்டுமின்றி, போன்கள் மற்றும் டேப்லெட்டுகளையும் இதில் சார்ஜ் செய்யலாம். இதில் உள்ள சேஃப்சார்ஜ் தொழில்நுட்பம், இணைக்கப்பட்ட சாதனங்களை அதிக மின்னூட்டம் (overcharging), அதிக வெப்பமடைதல் மற்றும் ஷார்ட் சர்க்யூட் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது என்பதே இதன் சிறப்பம்சம்.
இதன் கச்சிதமான GaN வடிவமைப்பு மற்றும் கழற்றக்கூடிய பவர் கார்டு ஆகியவை இதை பயணங்களின்போது எடுத்துச் செல்லவும் ஏற்றதாக மாற்றுகின்றன.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
7-க்கும்-1 சார்ஜிங், 5 டைப்-சி போர்ட்கள் மற்றும் 2 யுஎஸ்பி-ஏ போர்ட்கள் இருப்பதால், ஒரே நேரத்தில் 7 சாதனங்கள் வரை சார்ஜ் செய்யலாம்.
140W வேகமான சார்ஜிங் என்பதால் லேப்டாப்கள் மற்றும் அதிக திறன் கொண்ட சாதனங்களுக்குக் கூட விரைவான மற்றும் திறமையான சார்ஜிங்கை வழங்க, 150W வரையிலான 'BoostedSpeed' திறனை இது கொண்டுள்ளது.
ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள் மற்றும் ப்ளூ டூத், ஹெட்செட், என பல சாதனங்களை சார்ஜ் செய்ய இது சிறந்தது.
அதிகம் சூடாவதைக் குறைத்து, அனைத்து சாதனங்களுக்கும் நம்பகமான செயல்திறனை உறுதி செய்கிறது.
திறமையான மின் பகிர்வு அமைப்பு, இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களிலும் சார்ஜிங் வேகத்தை அதிகபட்சமாக்குகிறது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






