உதடுகள் கருப்பாக இதுதான் காரணம்! சரிசெய்யும் வழிகள்!

சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்தும் பலரும் இன்று உதடு பராமரிப்பில் கவனம் செலுத்த மறந்துவிடுகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்தும் பலரும் இன்று உதடு பராமரிப்பில் கவனம் செலுத்த மறந்துவிடுகின்றனர். இதனால் சருமம் பிரகாசமாகவும் உதடு வறண்டோ அல்லது கருப்பாக காணப்படும். இது முகத்தின் அழகைக் கெடுக்கும். 

உதடு கருமையாவது உதடு பராமரிப்பின்மையை அல்லது வைட்டமின் குறைபாட்டைக் காட்டுகிறது. உதடு கருமையாவதற்கு பல காரணங்கள் உள்ளன. 

மரபியல், ரத்தசோகை, அதிகமாக காபி, டீ குடிப்பதால் பித்தம் அதிகரிப்பு, உதடு மேக் அப்- யை சரியாக நீக்காதது, உதடு மேக் அப் அலர்ஜி, போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாமை, சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களின் தாக்கம், புகைப்பழக்கம் உள்ளிட்ட காரணங்கள் இருக்கின்றன. 

உதடு வறட்சியின் போது எச்சில் கொண்டு ஈரப்படுத்துவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது முற்றிலும் தவறு. இதனாலும் உதடு கருமையாகலாம். 

மேற்குறிப்பிட்ட காரணங்களில் எதுவெனக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். 

செய்ய வேண்டியவை: 

♦ வைட்டமின் குறைபாடு என்றால் வைட்டமின் ஏ, சி உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். அதிகமாக காய்கறிகள், பழங்கள் உணவில் சேர்க்க வேண்டும். 

♦ உதடு வறட்சியைப் போக்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

♦சருமத்திற்கு சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவது போன்று உதட்டிற்கும் சன்ஸ்க்ரீன் லிப்-லாஸ்/ லிப்-பாம்களை பயன்படுத்த வேண்டும். 

♦உதட்டின் மேல் வெண்ணெய் , தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் தேய்த்து வர உதடுகள் கருமை நீங்கும்.

♦ உதட்டின்மேல் சர்க்கரை தடவி ஸ்க்ரப் செய்யலாம். 

♦ தினமும் தயிரை உதட்டில் தடவி வாருங்கள். 

♦ ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி வரலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com