சுடச்சுட

  

  ஷாலினி விசாகனின் சுவஸ்திரா டிசைன் ஸ்டுடியோ வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் அணிவகுப்பு!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 17th February 2017 03:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shalini_visakan

   

  அழகிப் போட்டிகளும், பொருட்களை அறிமுகம் செய்விக்கும் புரமோஷன் மேடை அணிவகுப்புகளும் அதிகரித்து வரும் இன்றைய நாட்களில் ‘ராம்ப் வாக்’ என்றால் என்னவென்று எல்லோருக்கும் புரிந்தே இருக்கும். ராம்ப் வாக் என்றால் அதில் அழகிகள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும் என்று சட்டமில்லை. பிரபல டிசைனர்களில் ஒருவரான ஷாலினி விசாகன் சுவஸ்திரா என்ற பெயரில் தனது பிரத்யேக பிராண்டுகளில் புதுப் புது வகையான ஆடைகளை வருடம் தோறும் அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த முறையும் ஷாலினி மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்பெஷல் ஆடைகளை வடிவமைத்து அந்த ஆடைகளின் அறிமுக விழா அணிவகுப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளையே பங்கேற்க வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

  இந்த முயற்சியில் ஷாலினியுடன் கைகோர்த்திருப்பவர்கள் சர்வ தேச அளவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்றே பிரத்யேகமாக ‘மாஸ்டெக்டோமி’ வகை ரவிக்கைகளை வடிவமைத்த ஃபேஷ்ன் இரட்டையர்களான ஷிவன்& நரேஷ். புகழ்பெற்ற நீச்சல் ஆடை வடிவமைப்பாளர்களான இவர்கள் இந்த முறை ஷாலினியுடன் இணைந்து குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான செளகரியமான புது ஆடை வகைகளை வடிவமைத்து அவற்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

   

  நாள் முழுக்க சக்கர நாற்காலியிலேயே கழிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ள மாற்றுத் திறனாளிகள், குறிப்பாக முதுகுத் தண்டுவட பாதிப்ப்புள்ளவர்கள், கைகள் அல்லது கால்களில் சீரான இயக்கம் இல்லாதவர்கள், தங்களது ஆடைகளின் பட்டன்களையோ, ஷிப்களையோ போட்டுக் கொள்ள முடியாதவர்கள் போன்றவர்களுக்கென்றே ஸ்பெஷலாக காந்தங்களையும், ஒட்டும் பட்டன்களையும் பயன்படுத்தி ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


   
  தேசிய ஃபேஷன் டிசைனர் பள்ளி மாணவியான 30 வயது ஷாலினி மனந்து கொண்டதும் ஒரு மாற்றுத் திறனாளியைத் தான். ஷாலினியின் கணவர் ஜஸ்டின் விஜய் ஜேசுதாஸ் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு வசதியாக ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கியது தான் இந்த முயற்சியின் தொடக்கம் என ஷாலினி தெரிவித்தார். தனது கணவருக்காக ஸ்பெஷல் லூப்கள் வைத்து முதன்முதலாக ஷாலினி ஒரு ஆடையை வடிவமைத்தார். பின்பு தண்டுவடப் பாதிக்கப்பட்ட தனது பக்கத்துவீட்டுப் பெண்மணிக்காக எளிதில் உடுத்துக் கொள்ளும் வகையிலான ஒரே பீஸ் துணியால் ஆன புடவையை வடிவமைத்துக் கொடுத்தார். இப்படித் தொடங்கியது தான் பின்னர் முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகளின் செளகரியத்தை மட்டுமே மனதில் வைத்து ஆடைகளை வடிவமைக்கும் எண்ணத்துக்கு உந்துகோளானது.

  ஷாலினியின் டிசைன் ஸ்டுடியோவில் தற்போது மாற்றுத் திறனாளிகளில் பெண்களுக்கான கிரப் டாப்ஸ், மேக்ஸி ஸ்கர்ட்டுகள், பல்லாஸோக்கள் மற்றும் ஆண்களுக்கான குர்தாக்கள், ஷெர்வானிகள், வேஷ்டிகள் உள்ளிட்டவை குறைந்த பட்சமாக 1000 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. எல்லா உடைகளிலும் மேனுவலான ஷிப்கள் தவிர்க்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக ஆடைகளில் காந்தங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  ஷாலினியின் சுவஸ்திரா டிசைன் ஸ்டுடியோ ஆடைகளை வாங்கிப் பயன்படுத்த விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 9962318808 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai