ஆம்லா லைம் ஜூஸ்!

சிட்ரஸ் வகைப் பழமான இதில் கால்சியம் சத்து அதிகம்.
ஆம்லா லைம் ஜூஸ்!
Updated on
1 min read

ஆம்லா என்பது பெரிய நெல்லிக்காய் 
ஆம்லா: 8
லெமன்:1
இஞ்சி: சின்னத் துண்டு
புதினா: 5 இலைகள் 
சர்க்கரை அல்லது தேன்:  தேவையான அளவு 
தண்ணீர் - 2 கப் 

செய்முறை:
பெரிய நெல்லிக்காய் அல்லது ஆம்லாவை நன்கு கழுவி தோல், விதை நீக்கி 2 கப் தண்ணீர் மற்றும்  இஞ்சி சேர்த்து மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும், லெமன் சாறு பிழிந்து வைக்கவும், தண்ணீர் சேர்த்து அரைத்த ஆம்லாவை ஜூஸ் வடிகட்டியால் வடிகட்டி ,பிழிந்து வைத்த லெமன் சாறு மற்றும் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது ஆம்லா லைம் ஜூஸ் தயார். இதை நீண்ட கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலாக நான்கைந்து புதினா இலைகளைத் தூவி பரிமாறவும்.

பலன்:
பெரிய நெல்லிக்காயை ஆம்லா என்றும்  மலைநெல்லிக்காய் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். சிட்ரஸ் வகைப் பழமான இதில் கால்சியம் சத்து அதிகம். இதை பெரியோர் முதல் சிறுவர் வரை அனைவரும் தினம் உணவில் ஒரு முறை சேர்த்துக் கொண்டால் பற்கள் மற்றும் பல் ஈறுகள் தொடர்பான பிரச்சினைகள் வராது தவிர்க்கலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com