சுவையான புளியோதரை தயாரிப்பது எப்படி?

புளியை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
சுவையான புளியோதரை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

அரிசி - 2 தம்ளர்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் - 5
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உடைத்த வேர்க்கடலை - 50 கிராம்
தேங்காய் - 1 கப் (துருவியது)
புளி - 1 எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
வெல்லம் - 25 கிராம்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி பருப்பு - தாளிக்க தேவைக்கேற்ப
பட்டை - தேவைப்பட்டால் ஒரு துண்டு

செய்முறை

புளியை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்

அரிசியை நன்கு கழுவி நான்கு தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வைக்கவும். சாதம் குழைவாக இல்லாமல் உதிரியாக இருக்க வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தை ஆற வைக்கவும்.

ஒரு வாணலியில் வெந்தயம் மற்றும் பட்டை இரண்டையும் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து, இத்துடன் கொத்தமல்லி, மிளகாய் வத்தல், மிளகு, சீரகத்தையும் சேர்த்து வறுத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் இந்த பொடியுடன் புளிக் கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு 1 டீஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் வைக்கவும்.

நன்கு கெட்டியான பதத்துக்கு வந்ததும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

மீதமிருக்கும் எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்த பிறகு வேர்க்கடலையும் அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கருவேப்பிலையையும் சேர்த்து புளிக்காய்ச்சலில் கொட்டவும்.

எள்ளைத் தனியாகச் சிறிது எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். தேங்காயையும் தனியாக வாணலியில் லேசாக வறுத்து புளிக்காய்ச்சலில் கொட்டிக் கிளறவும்.

ஆற வைத்திருந்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலை ருசிக்கேற்ப கலக்கவும். 

சுவையான புளியோதரை தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com