நாவூறும் காளான் ஃப்ரை! டேஸ்ட் அன்லிமிடட்!

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடிக்கும் காளானைச் சமைப்பது எளிது.
நாவூறும் காளான் ஃப்ரை! டேஸ்ட் அன்லிமிடட்!

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடிக்கும் காளானைச் சமைப்பது எளிது. காரணம் சில உணவுப் பொருட்களை நாம் அதன் தன்மை கெடாமல் சமைத்தால் போதும், அதனுள் ருசி பொதிந்துகிடக்கும்.

காளான் தண்ணீரை மிக விரைவாக உறிஞ்சும் தன்மை உடையது, அதைக் கழுவினால் வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதிலுள்ள வைட்டமின் சத்துக்களை இழக்கப்படும்.  அழுக்கும் மண்ணும் கலந்திருந்தால் சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுக்கலாம்.

காளானைப் பலவகையாக சமைக்கலாம், வித்யாசம் எல்லாம் சாப்பிடுவர்களின் கையில் இல்லையில்லை வாயில்தான் உள்ளது. இதோ ஒரு எளிமையான ரெசிபி :

தேவையானவை

நறுக்கிய காளான் - ஒரு பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு (விழுதாக அரைத்தது) 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத் தூள் - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
சோயா சாஸ்  - 1/2 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம் மற்றும் வரமிளகாய் போட்டு தாளிக்கவும்.

இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் போட்டு பிரட்டவும்.

பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூளைப் போடவும். அதன்பின் நறுக்கிய காளானைச் சேர்த்து நன்கு வதக்கவும். சோயா சாஸ் மற்றும் வினிகர் ஊற்றி, கரம் மசாலாவைச் சேர்த்து வறுக்கவும்.

மிளகத் தூள் மற்றும் கொத்துமல்லியை அளவாகச் சேர்த்து பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com