அல்லேலூயா உணவகம் ‘அக்கா கடை’யைப் பத்தி பிரமாதமா பேசிக்கிறாங்களே! நீங்க சாப்பிட்டிருக்கீங்களா?

நான் இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் இங்க சாப்பிட மறக்க மாட்டேன். வீட்டுச் சாப்பாடு மாதிரியே மீன் குழம்பு வச்சித் தராங்க. கறியெல்லாம் நம்ம வீட்ல செஞ்சு சாப்பிட்டா கூட இந்த ருசி வராது. இறா வறுவல் ஆர்டர்
அல்லேலூயா உணவகம் ‘அக்கா கடை’யைப் பத்தி பிரமாதமா பேசிக்கிறாங்களே! நீங்க சாப்பிட்டிருக்கீங்களா?

பட்டினப்பாக்கம் கடற்கரை ஓரமாக ‘அல்லேலூயா உணவகம்’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார் ஒருவர். அவர்களது கடையைப் பற்றிய விடியோக்கள் யூடியூபில் காணக் கிடைக்கின்றன. சாப்பாடு 50 ரூபாய் தான் என்கிறார்கள். 

சாம்பார், ரசம், சாப்பாடு முதல் முட்டை சாப்பாடு, எறா சாப்பாடு, கடமா சாப்பாடு, நண்டு சாப்பாடு, நெத்திலி சாப்பாடு, கறி சாப்பாடு, செனை (மீன் முட்டை) சாப்பாடு, சுறாப்புட்டு, எறா வறுவல், கடமா வறுவல், நெத்திலி வறுவல், கறி வறுவல், என்று அசைவப் ப்ரியர்களுக்கு வேண்டிய எல்லாமும் கிடைக்கிறது. 50 ரூபாய் சாப்பாடு அன்லிமிடெட் என்கிறார்கள். ஒருமுறை சாப்பாடு வாங்கி மாற்றி மாற்றி வெரைட்டியாக ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிறார் கடை உரிமையாளர். இந்தக் கடையின் வாடிக்கையாளர்கள், வாரம் ஒருமுறையாவது இங்கே வந்து சாப்பிட்டு விட்டுச் செல்வோம் ருசி அந்த மாதிரி என்கிறார்கள்.

சுட்டி குட்டீஸ், சொல்லுங்கண்ணே, சொல்லுங்க இமாம் அண்ணாச்சி கூட இந்தக் கடையின் வாடிக்கையாளர்களில் ஒருவர்.

‘நான் இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் இங்க சாப்பிட மறக்க மாட்டேன். வீட்டுச் சாப்பாடு மாதிரியே மீன் குழம்பு வச்சித் தராங்க. கறியெல்லாம் நம்ம வீட்ல செஞ்சு சாப்பிட்டா கூட இந்த ருசி வராது. இறா வறுவல் ஆர்டர் பண்ணா அந்தண்ணன் மேல ஒரு மசால்பொடி தூவித் தரார். அருமையா இருக்கும் சாப்பிட. மசால் அவரே தயார் பண்றாராம். மசால் பொடியில என்னல்லாம் சேர்க்கறீங்க சொல்லுங்கண்ணு கேட்டா சொல்ல மாட்டேங்கிறார். தெரிஞ்சா நானும் தனியா கடை போட்ருவேன்னு பயப்படறார் போல’ என்று சிரிக்கிறார் இமாம் அண்ணாச்சி.

சென்னை மட்டுமல்ல இந்தியாவில் எந்தப் பெருநகரத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே நகரின் அழகுக்கும், சுவாரஸ்யத்துக்கும் பெருமை சேர்க்கும் வஸ்துக்களின் பட்டியலில் அவற்றின் ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளுக்கும் முக்கிய இடமுண்டு. சென்னையில் அனைத்து ஏரியாக்களிலும் பிரபலமான தெருவோர உணவுக்கடைகள் உள்ளன. கடற்கரையிலும் இப்படி பெயர் சொல்லும்படியாக கஸ்டமர்களை ஈர்க்கும் உணவகங்கள் இருக்கின்றன.

இவர்களுக்கென்று தனியாக தொலைக்காட்சி விளம்பரங்கள் எல்லாம் தேவை இல்லை. எல்லாம் செவி வழிச் செய்தியாகவே கடையின், உணவின் மகத்துவம் பற்றிய செய்தி பரவி ஒவ்வொரு கடையிலும் கூட்டம் அம்முகிறது. ஒருமுறை சாப்பிட்டவர்கள் மறுமுறை செல்ல மறப்பதில்லை. இப்படி வளர்ந்த கடைகள் இங்கே அனேகம்.

அந்த வகையில் இந்த வாரம் அல்லேலூயா உணவகம் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் அவர்களது உணவை ருசித்து விட்டு உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை எங்களுடன் பகிருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com