சுடச்சுட

  

  வடநாட்ல இதை லஞ்ச்னு சொல்லிக்கிறாங்க, நமக்கெல்லாம் இது வெறும் ஸ்னாக்ஸ் மட்டும் தான்!

  By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.  |   Published on : 25th May 2019 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Sabudana_Khichdi

   

  சாபுதானா கிச்சடி... அதாங்க ஜவ்வரிசி கிச்சடி அதைத் தான் இந்தியில சாபுதானா கிச்சடிக்கிங்றாங்க. அந்தக் கிச்சடி டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு ஸ்ட்ரீட் ஃபுட் சேனல் ஒன்னு சொல்லுச்சு. டிஃபரண்ட்டா இருக்கேன்னு வீட்ல ட்ரை பண்ணிப் பார்த்தேன். நிஜமாவே நல்லாத்தாங்க இருக்கு. ரொம்ப அதிக செலவெல்லாம் இல்லை. 2 கப் வேக வைத்த சாபுதானா தான் மெயின். கூட கொஞ்சம் சாட் மசாலா, பேல்பூரி (ஓமப்பொடி) புதினா, மல்லித்தளை 2 டீஸ்பூன், அரை மூடி லெமன் சாறு இவ்ளோ தான் முடிஞ்சது கிச்சடி வேலை. மொத்தக் குடும்பத்துக்கும் தேவையான சத்தான மாலைச் சிற்றுண்டி ரெடி.

  தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரசி : 2 கப்
  • பெரிய வெங்காயம்: 1 பொடியாக நறுக்கியது
  • சாட் மசாலா: 2 டீஸ்பூன் (காரம் தேவைப்படுவதற்கு ஏற்ப)
  • ஓமப்பொடி அல்லது மிக்ஸர்: 1 டேபிள் ஸ்பூன்
  • புதினா மல்லித்தளை: 2 டீஸ்பூன்
  • லெமன் சாறு: அரைமூடி 
  • உப்பு: தேவையான அளவு

  செய்முறை:

  முதலில் ஜவ்வரிசியை ஊற வைத்து மிருதுவாக ஆனதும் தேவையான பதத்தில் வேக வச்சு எடுத்துகனும். பிறகு வெந்த ஜவ்வரிசியில் மேற்கண்ட பொருட்களை எல்லாம் பதமாகச் சேர்த்துக் கிளறிப் பரிமாற வேண்டியது தான். சுவை அள்ளும். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். ஆனால், அளவோடு நிறுத்திகனும். இல்லைன்னா திகட்டிடும். வாரம் ஓரிரு நாட்கள் எளிதா செய்து சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் வெரைட்டி இது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai