வாரம் தவறாம நான்வெஜ், நாள் தவறாம ஐஸ்கிரீம் முழுங்கறவங்க தவறாம குடிக்க வேண்டிய ‘நச்சு நீக்கி ஜூஸ்’!

அதிக அளவில் உடலில் நச்சுக்களைத் தங்கச் செய்கிற மாதிரியான உணவுகளை நம்ம குழந்தைகளும் சரி வீட்டில இருக்கும் மத்தவங்களும் சரி சாப்பிடறாங்கன்னா, அவங்களோட நன்மைக்காக நாம ஏதாவது செய்தாகனும் தானே?! அந்த நன்மை
வாரம் தவறாம நான்வெஜ், நாள் தவறாம ஐஸ்கிரீம் முழுங்கறவங்க தவறாம குடிக்க வேண்டிய ‘நச்சு நீக்கி ஜூஸ்’!

இப்போ விடுமுறை காலம். வீட்டில் இருக்கும் குழந்தைகள் விதம் விதமாகச் சாப்பிட ஆசைப்படுவார்கள். அது சைவமோ, அசைவமோ உடலுக்கு ஆரோக்யமானதுங்கறதை விட நாக்குக்கு ருசியா இருக்கனும்ங்கறது தான் குழந்தைகள் பாலிஸி. அதை அம்மாக்கள் நிச்சயம் மறுக்க முடியாது. ஏன்னா, எல்லா நேரமும் சாப்பாட்டு விஷயத்துல கண்ட்ரோல் பண்ணிட்டே இருந்தா குழந்தைங்களுக்கும் அலுத்துரும், அம்மாக்களுக்கும் குழந்தைகளை நினைச்சு பாவமா ஆயிடும். அதனால அம்மாக்களோட ஆரோக்ய வளையங்கள் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் அடிக்கடி தளர்த்தப்படும்.  வாரம் ஒருமுறை நான்வெஜ்னு இருந்த மெனு மாற்றப்பட்டு லீவு நாட்களில் அது வாரம் இருமுறை அல்லது மூன்று முறையாகவும் ஆக்கப்படலாம். ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தினமும் கூட சாப்பிட அனுமதிக்கப்படலாம். அம்மாதிரியான நேரங்களில் குடலும், கல்லீரலும் ஓவர் டைம் வேலை செய்ய வேண்டியதா இருக்கும். அதனால அந்த ரெண்டு உறுப்புகளுக்கும் நன்மை செய்யக் கூடியதா ஒரு நச்சு நீக்கி ஜூஸ் ரெஸிப்பி பத்தி நாம தெரிஞ்சு வச்சிக்கிறது நல்லதில்லையா?

அதிக அளவில் உடலில் நச்சுக்களைத் தங்கச் செய்கிற மாதிரியான உணவுகளை நம்ம குழந்தைகளும் சரி வீட்டில இருக்கும் மத்தவங்களும் சரி சாப்பிடறாங்கன்னா, அவங்களோட நன்மைக்காக நாம ஏதாவது செய்தாகனும் தானே?! அந்த நன்மை தான் இது!

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1 கப் (கியூப்களாக நறுக்கியது)
எலுமிச்சை - 2 (விதை நீக்கிப் பிழிந்து கொள்ளவும்)
கேரட் - 1 கப் (தோல் நீக்கி கியூப்களாக நறுக்கிக் கொள்ளவும்)
பீட்ரூட் - 1 கப் (தோல் நீக்கி கியூப்களாக நறுக்கிக் கொள்ளவும்)
இஞ்சி - ஒரு சின்ன துண்டு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
தண்ணீர் - தேவையான அளவு
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
கிளாஸ் கண்டெய்னர் - திக்கான மாக்டெய்லை வடிகட்ட வசதியாக வாய்ப்பாகம் அகலமான கண்டெய்னர்களைத் தேர்ந்தெடுக்கவும்)
மெல்லிய காட்டன் துணி - மாக்டெய்லை வடிகட்ட

செய்முறை:

ஜூஸரை எடுத்துக் கொள்ளவும், ஜூஸர் இல்லாதவர்கள் சாதாரண மிக்ஸியில் நடுத்தர அளவுள்ள ஜாரில் அதன் பிளேடு முங்கும் அளவுக்கு தண்ணீர் நிரப்பி அதில் கியூப்களாக நறுக்கிய ஆப்பிள் துண்டங்கள், கேரட் மற்றும் பீட்ரூட் துண்டங்களைப் போட்டு, இஞ்சித் துருவல் சேர்த்து எலுமிச்சம் பழங்களையும் பிழிந்து ஹை ஸ்பீடில் நன்கு அரைக்கவும். இப்போது மாக்டெய்ல் தயார். கண்ணைப் பறிக்கும் அடர் சிவப்பு நிற மாக்டெய்ல் கூழ் கிடைக்கும். இதை அப்படியே குடிக்க முடியாது. குடித்தால் நல்லது தான். ஆனால், அந்த ஃப்ளேவர் & டேஸ்ட் ஒத்துக் கொள்ளாமல் சிலருக்கு குமட்டல் வரலாம். எனவே அந்தப் பழக்கூலை அப்படியே ஒரு மெல்லிய துணி வடிகட்டி கொண்டு கிளாஸ் கண்டெய்னர் ஒன்றில் வடிகட்டவும். அடர்த்தியான கூழ் என்பதால் மெதுவாகத்தான் ஜூஸ் வடிகட்ட முடியும். கூழில் இருந்து ஜூஸ் முழுவதுமாக வடிந்த பின்னர் துணியை நன்கு கைகளால் அழுத்திப் பிழிந்து விடவும். இப்போது பழக்கூலில் இருக்கும் மொத்த ஜூஸும் கண்டெய்னருக்கு வந்திருக்கும். மிஞ்சியிருக்கும் சக்கையை நீங்கள் முகம் கழுவப் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அப்படியே உங்கள் மாடித்தோட்டங்களில் காய்கறித் தொட்டிகளுக்கு உரமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வடிகட்டிய ஜூஸில் ஐஸ் கியூப்களைச் சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து அருந்தலாம். ஜுஸ் வயிற்றுக்குள் இறங்கும் போது சில்லென்று குளுமையுடன் அருமையாக இருக்கும்.

ஹெல்த் பலன்கள்...

ஆப்பிளும், எலுமிச்சையும் கல்லீரலுக்கு நன்மை செய்யக்கூடியவை. இஞ்சி செரித்தலுக்கு நல்லது. கேரட்டுகளில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதோடு அவை நமது அட்ரீனல் சுரப்பிகளுக்கும் அற்புதமான அளவில் நன்மை செய்யக்கூடியவை. மிகக்கடினமான மன அழுத்த காலங்களில் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துவதில் கேரட்டுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பீட்ரூட்டுகளில் நைட்ரேட் அதிகமுள்ளது. இது ரத்தச் சுத்திகரிப்புக்கு உகந்ததோடு உடல், மனம் இரண்டுக்குமே புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடியது அத்துடன் ரத்த அழுத்ததையும் குறைக்கவல்லது என்பது நிரூபிக்கப்பட்ட மருத்துவ பலன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com