ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களுக்கான விருதுப் பட்டியல், இதில் இந்திய உணவகத்துக்கு இடமுண்டா?!

ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களுக்கான விருதுப் பட்டியல், இதில் இந்திய உணவகத்துக்கு இடமுண்டா?!

இந்த விருதுப் பட்டியலில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முன்னிலை வகித்து வந்த பாங்காக்கின் 'கக்கன்' ரெஸ்டாரெண்ட் இந்த ஆண்டு துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆசியா கண்டத்தின் இந்த சிறந்த 50 உணவகங்களைத் தேர்ந்தெடுக்க உணவியல் வல்லுனர்கள், உணவியல் எழுத்தாளர்கள், உலகின் தலைசிறந்த செஃப்கள், ஹோட்டல் தொழிலில் நீண்ட கால அனுபவமும் திறமையும் கொண்ட முன்னோடிகள், உணவுப்ரியர்கள் என சுமார் 318 நபர்களிடம் முறையாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. வாக்கெடுப்பின் இறுதியில் கிடைத்த ஓட்டுக்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது தான் கீழுள்ள பட்டியல். இப்படி ஒரு போட்டியை வருடம் தோறும் நடத்தி வருகிறது ஐக்கிய நாடுகளைச் சார்ந்த வில்லியம் ரீட் பிசினஸ் மீடியா  எனும் ஊடக நிறுவனம் ஒன்று.

இந்த விருதுப் பட்டியலில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முன்னிலை வகித்து வந்த பாங்காக்கின் 'கக்கன்' ரெஸ்டாரெண்ட் இந்த ஆண்டு துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. விருது ரேஸில் கக்கனை முந்தியது சிங்கப்பூரின் ஓடெட்டி  இந்தியன் ஃப்யூஷன் ரெஸ்டாரெண்ட். 

1. ஓடெட்டி- சிங்கப்பூர்
2. கக்கந் பாங்காக், தாய்லாந்து
3. டென் - டோக்கியோ, ஜப்பான்
4. சுஹ்ரிங் - பாங்காக், தாய்லாந்து
5. ஃப்ளோரிலெக் - டோக்கியோ, ஜப்பான்
6. அல்ட்ரா வயலெட் - ஷாங்காய், சீனா
7. ம்யூம்- தைபே, தைவான்
8. நரிசவா - டோக்கியோ, ஜப்பான்
9. நிஹோன்யோரி ருஜின் - டோக்கியோ, ஜப்பான்
10. பர்ன்ட் எண்ட்ஸ் - சிங்கப்பூர்
11. தி சேர்மேன் - ஹாங்காங்
12. ஒட்டோ இ மெஸ்ஸோ - ஹாங்காங்
13. மிங்கிள்ஸ் - சியோல், தென்கொரியா
14. லா சிமி - ஒசாகா, ஜப்பான்
15. பெலோன் - ஹாங்காங்
16. கா - பாங்காக், தாய்லாந்து
17. இண்டியன் அக்ஸெண்ட் - நியூ டெல்லி, இந்தியா]
18. || ரிஸ்டோரண்டே - லுகா ஃப்ராண்டின் - டோக்கியோ, ஜப்பான்
19. போலன் - பாங்காக், தாய்லாந்து
20. லீ டியூ - பாங்காக், தாய்லாந்து
21. ஆம்பர் - ஹாங்காங்
22. நாஹ்ம் - பாங்காக், தாய்லாந்து
23. சஸெங்கா - டோக்கியோ, ஜப்பான்
24. லா மாய்சன் டி ல நாவ்ரே கோ - ஃப்யூகுவாகா, ஜப்பான்
25. சுஷி சாய்டோ - டோக்கியோ, ஜப்பான்
26. எல் எஃப்ஃபர்வெஸ்ஸன்ஸ் - டோக்கியோ, ஜப்பான்
27. ஜேட் டிராகன் - மக்காவ், சீனா
28. பாஸ்டீ - பாங்காக், தாய்லாந்து
29. ஃபூ ஹி ஹூ - ஷாங்காய், சீனா
30.  ரா - தைபே, தைவான்
31. ஷோன் ரியூஜின் - தைபே, தைவான்
32. ஜான் - சிங்கப்பூர்
33. லெஸ் அமிஸ் - சிங்கப்பூர்
34. வியா - ஹாங்காங்
35. மினிஸ்டிரி ஆஃப் கிராப் - ஸ்ரீலங்கா
36. விங் லீ பேலஸ் - மக்காவ்
37. நெய்பர்ஹூட் - ஹாங்காங்
38. லங் கிங் கீன் - ஹாங்காங்
39. நூரி- சிங்கப்பூர்
40. வாகு ஜின் - சிங்கப்பூர்
41. டாக் டாகி - சியோல், தெற்கு கொரியா
42. லோகவோர் - பாலி, இந்தோனேசியா
43. டோயோ ஈட்டரி - மனிலா, பிலிப்பைன்ஸ்
44. செவன்த் சன் - ஹாங்காங்
45. குயிண்ட் எசன்ஸ் - டோக்கியோ, ஜப்பான்
46. தேவகன் - கோலாலம்பூர், மலேசியா
47. சுகலபோ - டோக்கியோ, ஜப்பான்
48. சோர்ன் - பாங்காக், தாய்லாந்து
49. கார்னெர் ஹவுஸ் - சிங்கப்பூர்
50. டா வீ - ஹாங்காங்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com