சூரிய ஆற்றல் பவர் பேங்க்!
இந்த பவர்பேங்க் தண்ணீரும், தூசியும் உட்புகாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. விலை ரூ.799. அனைத்து முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிலும் இந்த பவர் பேங்க் கிடைக்கிறது.


இப்போது செல்லிட பேசியும், மனிதனும் பிரிக்க முடியாதவர்களாகிவிட்டனர். அதிலும், ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போய் அவதிப்படுவதைக் காணலாம். செல்லிடபேசியில் திடீரென சார்ஜ் இல்லாமல் போனால், பவர் பேங்கை பயன்படுத்தி உடனடியாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.
ஆனால், நல்ல தரத்துடன் கூடிய பவர் பேங்க் வாங்க வேண்டுமானால், ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டி வரும். அப்படி வாங்கும் பவர் பேங்கை நாம் முன்பே சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த பவர்பேங்க்கிலும் "பவர்' இல்லாமல் போனால் என்ன செய்வது? அதுமட்டுமல்ல, மின்தடை ஏற்பட்டுவிட்டால் பவர்பேங்கை சார்ஜ் செய்ய முடியாமல் போய்விடும்.
இந்தக் குறைகள் எதுவுமில்லாமல், சூரிய ஒளி சக்தியில் இயங்கும் வகையிலான ஒரு சோலார் பவர் பேங்க் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தில்லியைச் சேர்ந்த UIMI Technologies என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
UIMI U3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பவர் பேங்கைக் கொண்டு செல்லிட பேசிக்கு இரண்டு முறைக்கு மேல் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இதில் 6000 mAh என்ற அளவிலான மின்சக்தி சேமித்து வைக்கப்படும். அந்த மின்சக்தியையும் நாம் சூரிய ஒளி ஆற்றல் மூலம் பெற்றுவிடலாம்.
இந்த பவர்பேங்க் தண்ணீரும், தூசியும் உட்புகாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. விலை ரூ.799. அனைத்து முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிலும் இந்த பவர் பேங்க் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...