கல்வி, வேலை என ஆண்களுக்கு நிகராக அல்ல, அதற்கும் மேலாக பெண்கள் சாதித்து வருகின்றனர்.
பெரும்பாலான இளம் பெண்கள் தற்போது வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது சரியான விடுதியைத் தேர்வு செய்வதுதான். ஒரு விடுதியைத் தேர்வு செய்யும்போது முதலில் சமையல் அறையின் அமைவிடம் சரியாக இருக்கிறதா? டைனிங் ஹால் இருக்கும் இடம் எப்படி இருக்கிறது? துணிகள் துவைக்கும் இடம் சரியான இடத்தில் இருக்கிறதா? பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும். இரண்டாவது, மருந்துக் கடை, ஏ.டி.எம்., பேருந்து நிலையம் ஆகியன விடுதியின் அருகில் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
தங்கப்போகும் விடுதியில் தனி அலுவலக அறை இருக்கிறதா என்பதையும் பாருங்கள். விடுதி அமைந்திருக்கும் இடம் அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள். மதுக்கடைகளின் அருகில் அமைந்திருக்கும் விடுதியைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. விடுதியில் பாதுகாப்புப் பணியாளர்கள் இருக்கிறார்களா? என்று பாருங்கள். குறுகலான சந்து போன்ற இடங்களில் விடுதி அமைந்திருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள். இன் டைம், அவுட் டைம் ஒவ்வொருவரும் கட்டாயம் எழுத வேண்டும் என்ற முறை உள்ளதா? என்பதைப் பாருங்கள். அதற்கான தனி பதிவேட்டினை வைத்திருக்கும் விடுதி, நல்லது.
அந்த விடுதியில் தங்கி இருக்கும் பெண்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பது நல்லது. அதாவது, உங்கள் மாத வருவாயும் உங்களுடன் தங்கி இருக்கும் பெண்ணின் மாத வருவாயும் ஓரளவுக்காவது நிகராக இருக்க வேண்டும்.
உங்களை விட இரண்டு மடங்கு வருமானம் வாங்கும் பெண்களோடு தங்கி இருக்கும்போது, அவர்கள் செய்யும் அசாதாரண செலவுகளுக்கு நீங்களும் பழக்கமாகிவிடுவீர்கள். அல்லது அந்தப் பெண்கள் உங்களைப் புறக்கணிக்கவும் செய்யலாம்.
உடன் தங்கி இருப்பவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்? என்று முதலில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஐ.டி. நிறுவனத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பெரும்பாலும் இரவுப் பணியே இருக்கும். உங்கள் விடுதி அலுவலக வாகனங்கள் நுழையாதபடியான சாலைகளில் இருக்கும்பட்சத்தில் செக்யூரிட்டி பணியாளரை பாதுகாப்புக்காக உடன் அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
இது எல்லாமே சரியாக இருந்தால் விடுதி என்பது உங்களின் இன்னொரு வீடாக இருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை
- ம.பவித்ரா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் வெற்றியைக் கொண்டாடிய கேரள ரசிகர்கள்!

நீதிக் கதைகள்! புதிய யோசனை!

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108

நாளை ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்! ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


