சிரியாவில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் போர் முற்றுகையிடப் பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப் படாமல் கிடைக்கும் போது, கிடைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு, ஆசிரியர்களும், பள்ளிகளும் அமைந்தால், அமையும் இடங்களில் கல்வி கற்றுக் கொண்டு, விளையாட எப்போதேனும் வாய்ப்புக் கிடைத்தால் அப்போது விளையாடிக் கொண்டு என ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் எனும் பயங்கரமான சூழலில், போர் முற்றுகையின் கீழ் வாழும் அவலத்தை உலக நாடுகள் வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அவர்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும் என யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஆண்ட்டனி லேக் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியாவில் போர் முற்றுகையின் கீழ் வாழும் குழந்தைகளுக்கு இயல்பு வாழ்க்கை என்பது மறுக்கப் பட்ட ஒன்றாக இருக்கிறது. பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் போரினால் உயிரிழப்பதும், படுகாயம் அடைவதும் அங்கு சகஜமானதாக இருக்கிறது. இது முற்றிலும் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு இழைக்கப் படும் அநீதி! சிரியாவில் தினம் தோறும் லட்சக் கணக்கான மக்கள் கொடுங்கனவுகளுடன் தான் உறங்கி விழிக்கிறார்கள். போரற்ற இயல்பு வாழ்க்கை என்பது அவர்களைப் பொறுத்தவரை பகல் கனவாகி விட்டது.
அவர்களது குழந்தைகள் அங்கே பசிக்கு உனவும், நோய்களுக்கு போதுமான மருந்துகளும் இன்றி வாடுகிறார்கள். துப்பாக்கிச் சூடுகள், குண்டு முழக்கங்கள் என்று பார்த்தும், கேட்டும் குழந்தைகளில் பெரும்பாலானோர் உளவியல் கோளாறுகளுடன், கொடுமையான பய உணர்வுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய கடுமையான போர் சூழல்களிலும் அங்கிருக்கும் சமூக ஆர்வலர்களின் முயற்சியால் பதுங்கு குழிகளுக்குள் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் மருத்துவமனைகள் என்று தங்களுக்குள் சில அத்யாவசியத் தேவைகளை பகிர்ந்து கொண்டு வாழும் அந்த மக்களையும், லட்சக் கணக்கான அந்தக் குழந்தைகளையும் காக்க வேண்டிய கடமை உலக நாடுகளுக்கு இருக்கிறது.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போர் முற்றுகையை முறியடித்து சிரிய மக்களையும், குழந்தைகளையும் காக்கும் மனிதாபிமான முயற்சியில் யுனிசெஃப் உடன் உலக நாடுகள் கை கோர்க்க வேண்டும் என்றும் ஆண்ட்டனி அழைப்பு விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


