பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாட்ஸ் ஆப்... புதிய வசதி!

வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் மேல் எழுதவும், வரையவும் கூடிய புதிய வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2016, 10:40 am

அ. சர்ஃப்ராஸ்

இண்டர்நெட்டில் சிக்கியிருந்த இளைஞர் பட்டாளம் இன்று "வாட்ஸ் ஆப்' எனும் செயலிக்கு அடிமையாகிவிட்டது. 2014ஆம் ஆண்டு இல் வாட்ஸ் ஆப்பை ஃபேஸ் புக் நிறுவனம் வாங்கிய பின்பு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

ʻஃʼ என்று டைப் செய்தால் வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள நண்பர்களின் பெயர் பட்டியலை காணும் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் மேல் எழுதவும், வரையவும் கூடிய புதிய வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி, பயன்பாட்டாளரின் மனநிலையை விவரிக்கும் "இமோஜி' எனப்படும் பொம்மைகளை நாம் எடுக்கும் புகைப்படங்கள் மீது வைக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்காக செல்லிடப்பேசியில் உள்ள வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்து கொண்டால் போதும். வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள கேமரா பட்டன் மூலமாக எடுக்கும் புகைப்படமோ அல்லது ஏற்கெனவே எடுத்த புகைப்படத்தையோ வேறு நபர்களுக்கு அனுப்பும் போது இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள கேமரா பட்டன் மூலம் நமது செல்லிடப்பேசியில் உள்ள செல்பி கேமரா மூலம் இனி புகைப்படம் எடுக்கவும் முடியும். குறைவான வெளிச்சம் உள்ளபகுதிகளிலும், இரவு நேரங்களிலும் செல்ஃபி புகைப்படங்களைக் எடுக்க ஏதுவாக "பிளாஸ்' வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்கலாம். தற்போது ஆன்ட்ராய்ட் செல்லிடப் பேசிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்த வசதிகள், விரைவில் ஐ-போன்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.