பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டோலிவுட் அப்டேட்: பவன் கல்யாணின் 25 வது படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்!

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று ஸ்டுடியோ வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Published On :

தமிழில் ‘தல’ அஜித் போலத்தான் தெலுங்கில் பவன் கல்யாண். ஏனெனில், டோலிவுட்டின் அஷ்டாவதானியான, அவருக்குச் சேர்ந்திருக்கும் ரசிகர் பட்டாளமும், பாசத்தில் தானாகச் சேர்ந்த கூட்டம் என்று டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். அரசியலில் அண்ணன் சிரஞ்சீவியையே அசால்ட்டாகத் திரும்பிப் பார்த்து விட்டு ‘ஜன சேனா பார்ட்டி’ ஆரம்பித்து பட படவென்று முன்னேறிப் போய்க் கொண்டிருக்கும் பவனுக்கு அக்கட பூமியில் ரசிகர் பட்டாளத்துக்கு ஒரு குறையும் இல்லை. பவன் ஹிட் கொடுக்கிறாரோ இல்லையோ அவரது படம் ஷுட்டிங் முடிந்து வெளிவந்தாலே, அது அவரது ரசிகர்களுக்கு திருவிழாக் கொண்டாட்டம் தான். அந்த வகையில் இனி வரப்போவது பவனுக்கு 25 வது படம்.

தெலுங்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அந்தப் படத்துக்கு பெயர் எதுவும் இன்னும் இடப்படவில்லை. எனினும் இயக்கப் போவது திரிவிக்ரம் என முடிவாகியுள்ளது. முன்னரே ‘ஜல்ஸா’ மற்றும்  ‘அந்தரிண்டிகி தாரேதி’ படங்கள் மூலமாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த ஜோடியின் மூன்றாவது படமாக இது அமையப் போகிறது. 

ஹைதராபாத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி பவன் கல்யாண், அனு இம்மானுவேல் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. எஸ்.ராதாகிருஷ்ணா தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று ஸ்டுடியோ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.