மும்பை: கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை குறியீடுகள், இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் நிறைவடைந்தன.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் தனது முழு ஆண்டு வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்ததாலும், மீண்டும் எழும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவையால், ஐடி நிறுவனங்களின் பங்குகளை பெருமளவில் முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிந்தன.
இன்றயை காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 940.26 புள்ளிகள் சரிந்து 76,469.72 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 607.08 புள்ளிகள் சரிந்து 76,802.90 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 154.90 புள்ளிகள் சரிந்து 24,013.10 புள்ளிகளாக நிலைபெற்றது.
கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் 4.84 சதவீதம் உயர்ந்து 3,577.43 புள்ளிகள் ஏற்றம் கண்ட நிலையில் நிஃப்டி 1,006.4 புள்ளிகள் உயர்ந்து 4.34 சதவீதம் ஏற்றம் கண்டது.
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ் 6.69 சதவீதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 3.53 சதவீதமும், ஹெச்சிஎல் டெக் 2.74 சதவீதமும், டெக் மஹிந்திரா 2.45 சதவீதமும் சரிந்தன. மேலும் ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிந்த நிலையில் மறுபுறம் பார்தி ஏர்டெல், பவர் கிரிட் மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில், ஐடி குறியீடு 3.57 சதவீதம் வரை சரிந்தன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கான பேச்சுவார்த்தை, இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சுவிட்சர்லாந்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ் ஒத்திவைத்துள்ளார். இதற்கு நிர்வாக ரீதியான காரணங்களை வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான விற்பனை ஆகியவற்றின் மத்தியில் முதலீட்டாளர்கள் லாபத்தை முன்பதிவு செய்ததால், தொடர்ச்சியாக ஐந்து அமர்வுகளாக ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தன. ஆக்சென்ச்சரின் வருவாய் கண்ணோட்டத்தைத் தொடர்ந்து சந்தை உணர்வு பலவீனமடைந்த நிலையில், திட்டமிடப்பட்ட அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுடன் முடிவடைந்த நிலையில் ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு உயர்வுடன் நிலைபெற்றது. விடுமுறை காரணமாக ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன.
ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் உயர்வுடன் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமையன்று) உயர்வுடன் முடிவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 1,025.20 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.58 சதவீதம் சரிந்து 79.39 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Stock market benchmark indices ended lower on Friday after a five-day rally.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!!
23,400 புள்ளிகளை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவு; ஐடி துறை பங்குகள் தொடர் பின்னடைவு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 479 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 23,900க்கு அருகில் நிறைவு!!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



