மும்பை: வாகனம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கிப் பங்குகளில் ஏற்பட்ட வலுவான வாங்குதலால், இன்றைய வர்த்தகத்தில், இந்தியக் குறியீடுகள் வலுவாக நிறைவடைந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜூன் காலாண்டு வருவாய் குறித்த நம்பிக்கையும் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முதலீட்டாளர்களிடம் இது வெகுவாக உயர்த்தியது.
பலவீனமான உலகளாவிய பங்குச் சந்சதை இருந்தபோதிலும், உள்நாட்டில் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கி, அமர்வு முழுவதும் அதன் நிலையை தக்க வைத்து கொண்டது. நிஃப்டி இன்றைய உச்சபட்ச நிலையான 24,367.30 புள்ளிகளை தொட்டது.
டெக் மஹிந்திரா எதிர்பார்த்ததை விட சிறந்த ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்ததைத் தொடர்ந்து, குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்ட வலுவான வாங்குதலை தொடர்ந்து, ஊடகம், உலோகம் மற்றும் மருந்துத் துறை பங்குகளில் ஏற்பட்ட சரிவை ஈடுசெய்தது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 964.58 புள்ளிகள் உயர்ந்து 78,151.45 ஆகவும், நிஃப்டி 261.55 புள்ளிகள் உயர்ந்து 24,334.30 ஆக நிலைபெற்றது. இந்த வாரத்தில், சென்செக்ஸ் 0.5% மற்றும் நிஃப்டி 0.7% உயர்ந்தன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.4 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.2 சதவீதமும் சரிந்தன.
சென்செக்ஸில் கோடக் மஹிந்திரா வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் சன் பார்மா, ட்ரென்ட், பார்தி ஏர்டெல் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஜியோ ஃபைனான்சியல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், விப்ரோ, சன் பார்மா மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகிய பங்குகள் சரிந்தன.
துறைகளைப் பொறுத்தவரை, நிஃப்டி-யில் தனியார் வங்கி 2 சதவீதமும், பேங்க் 1.6 சதவீதமும், ஐடி 1.7 சதவீதமும், ஆட்டோ மற்றும் ரியாலிட்டி தலா 1.3 சதவீதமும், ஆயில் & கேஸ் 1 சதவீதமும், எஃப்எம்சிஜி 0.7 சதவீதமும் உயர்ந்தன. மறுபுறம் பார்மா 1.4 சதவீதமும், மெட்டல் 0.4 சதவீதமும் சரிந்தன.
பங்குகளைப் பொறுத்தவரை, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஜூன் காலாண்டில் கலவையான முடிவுகளை அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 1 சதவீதம் சரிந்தன. அதே சமயம், டெக் மஹிந்திரா அதன் வலுவான செயல்திறனைத் தொடர்ந்து 3 சதவீதமும், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், வலுவான காலாண்டு வருவாயைப் பதிவு செய்து 3 சதவீதம் உயர்ந்தன.
ஃபெடரல் வங்கி, சோனா பி.எல்.டபிள்யூ, எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி, அதானி எனர்ஜி, ஐப்கா லேப்ஸ், ஆரக்கிள் ஃபின் சர்வீசஸ், குஜராத் ஃப்ளூரோகெமிக்கல்ஸ், பிரமல் ஃபைனான்ஸ், பி.ஹெச்.இ.எல் உள்ளிட்ட சுமார் 100 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.
இந்திய ரூபாய், நான்கு நாள் தொடர் சரிவிலிருந்து மீண்டு, அமெரிக்க டாலருக்கு நிகராக 7 காசுகள் உயர்ந்து ரூ. 96.28 ஆக நிறைவடைந்தன. இதுவே அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு ரூ. 96.35 ஆக இருந்தது.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.79 சதவீதம் உயர்ந்து 85.52 டாலராக உள்ளது.
Summary
Indian benchmark indices ended on a strong note on July 17.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!

அமெரிக்க-ஈரான் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகளும், 23,900 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்த நிஃப்டி!

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




