நீட் மறுதேர்வால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 21 ஆம் தேதியில் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதைந்தாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நீட் மறுதேர்வு விரக்தி காரணமாக தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
கோவையில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி அனுகீர்த்தனா, மன அழுத்தம் காரணமாக உறவினர்களுக்கு உருக்கமான வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பிவிட்டு கடந்த ஜூன் 17 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோபிகா(19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சேகர் - புவனேஸ்வரி தம்பதியின் மகளான கோபிகா, கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மீண்டும் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தார்.
ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் மறுதேர்வுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Summary
NEET Re-exam: salem girl suicide due to pressure
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

நீட் மறுதேர்வு மன அழுத்தம்! கோவையில் மாணவி தற்கொலை

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்! நியாயமான, பாதுகாப்பான முறையில் நடத்த என்டிஏ உறுதி!

நீட் கட்டணம் திருப்பியளிப்பு: வங்கிக் கணக்குகளை சமா்ப்பிக்க ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



