/

நீட் போராட்டத்தில் அரசியல் ஆதாயம் தேடுபவர்களே கோமாளிகள்: சனம் ஷெட்டி

நீட் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டியிடம் மைக் பிடுங்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து...

News image

நீட் போராட்டத்தில் சனம் ஷெட்டியும் வெற்றிமாறனும்... - படங்கள்: எக்ஸ் / விக்னேஷ் ட்வீட்ஸ்

Updated On :25 ஜூலை 2026, 2:33 pm IST

சென்னையில் நடைபெற்றுவரும் நீட் தடைக்கான போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டியிடம் பேசும்போது மைக் பிடுக்கப்பட்டதால் அந்த இடத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை தடைசெய்ய வேண்டுமென தி.நகர் பாலன் இல்லத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திரைத்துறையினர் பா. ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் போன்ற பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி நேற்றிரவு கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது ஜன நாயகன் படத்தைப் பற்றி பேசியதால் அங்கிருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டு மைக்கை பிடுங்கினார்கள். அவர் பேசியதென்ன?

நீட் எதிர்ப்பு போராட்டமாக உருவெடுத்திருக்கும் இதற்கு நான் முழு ஆதரவு தருகிறேன். மாணவர்களுக்கு என் ஆதரவு எப்போதும் இருக்கிறது. ஆனால். இங்கு சிலர் பேசும் கருத்துகளுக்கு எனக்கு உடன்பாடில்லை. ஜன நாயகன் படத்தைப் பார்ப்பவர்கள் கோமாளிகள் எனக் கூறுகிறார்கள். நான் விஜய் ரசிகை. நேற்று முதல்காட்சி பார்த்துவிட்டுதான் வந்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது? (கத்தி கூச்சலிடுகிறார்கள்).

என்னைப் பேச விடாமல் செய்வதுதான் ஜன நாயகமா? படம் பார்த்தால் நான் கோமாளியா? அப்போது படம் எடுக்கும் இயக்குநர் வெற்றிமாறனையும் கோமாளி எனக் கூறுவீர்களா? நான் கோமாளி அல்ல, தங்களது அரசியல் ஆதாயத்தை இந்த மேடையை வைத்து பயன்படுத்திக்கொள்பவர்கள்தான் நிஜமான கோமாளிகள். இது ஒரு போலியான போராட்டம் எனக் கூறியுள்ளார்.

இது சமூக வலைதளத்தில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளது. ஒரு பக்கம் சனம் ஷெட்டிக்கு ஆதரவாகவும் மறுபக்கம் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

Summary

Those who are using the NEET protests stage for their own political agenda are the real jokers, says Sanam Shetty

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.