தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அனல்காற்று, ஜெயமோகன், பாலுமகேந்திரா, விஜய் சேதுபதி!

படம் கைவிடப்பட்டாலும் புகைப்படம் இப்போதும் தனது பொக்கிஷங்களுள் ஒன்றாக, தனக்குப் பிடித்த தனது மிகச் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாகப் பாதுகாப்பாக இருப்பதாக விஜய் சேதுபதி

News image
Updated On :3 பிப்ரவரி 2017, 7:27 am

ஜெயமோகனின் அனல்காற்று நாவலை அனேகம் பேர் வாசித்திருக்கலாம். ஒளி ஓவியரான மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அதை திரைப்படமாக்கும் எண்ணத்துடன் தன்னிடம் கதை கேட்டு வாங்கியதாக ஜெமோ தனது வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்பு அந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தவர் ஷேர் மார்க்கெட் நஷ்டத்தால் படத்தயாரிப்பையே கைவிட்டு விட அனல்காற்று திரைப்பட முயற்சியும் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும் ஜெமோ எழுதி இருந்தார். படம் டிராப் ஆனாலும் பாலுமகேந்திராவின் கை வண்ணத்தில் தனது நாவல் திரைப்படமாவதில் ஜெமோவுக்கு எதிர்பார்ப்புகள் இருந்ததோ இல்லையோ? இதை அறிந்ததிலிருந்து இருவரது ரசிகர்களுக்கும் கொஞ்சமேனும் ஏமாற்றம் இல்லாமலிருக்க வாய்ப்பில்லை. 

இதில் சுவாரஸ்யமான மற்றொரு விசயம் என்ன தெரியுமா? பாலுமகேந்திரா படமாக்கவிருந்த ஜெமோவின் அனல்காற்றில் நாயகனாக நடிக்க தேர்வாகியிருந்த நபர் யாரென்று தெரிந்தால் ஆச்சர்யப் பட்டுப் போவீர்கள். அது விஜய் சேதுபதி. இந்த வருட தினமணி தீபாவளி மலரில் விஜய் சேதுபதி அளித்த பிரத்யேக நேர்காணலில் இந்த விசயத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

திரையுலகில் நுழைந்த ஆரம்ப காலங்களில் வாய்ப்புகளுக்காக பாலுமகேந்திராவைச் சந்தித்த போது, பாலு மகேந்திரா விஜய் சேதுபதியிடம், ‘விஜய் உங்க கண்கள் அழகா இருக்கு. உங்களை ஒரு புகைப்படம் எடுக்கறேன். கதைக்குப் பொருந்தினா நீங்க தான் நான் அடுத்து இயக்கப் போகிற அனல்காற்று படத்தின் ஹீரோ’ என்று சொன்னாராம். சொன்னபடி பாலுமகேந்திரா விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்தார். படம் கைவிடப்பட்டாலும் புகைப்படம் இப்போதும் தனது பொக்கிஷங்களுள் ஒன்றாக, தனக்குப் பிடித்த தனது மிகச் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாகப் பாதுகாப்பாக இருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.

அனல்காற்று நாவலைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் தீவிர வாசகர்கள் ஜெமோவின் தளத்திலேயே அதை வாசித்துக் கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.