

ஃபிப்ரவர் 5 வது நாள் சென்னை அண்ணாநகரில் மினி மிலிஸியா சென்னை பேட்டில்- 2017 என்ற பெயரில் வீடியோ கேம் விளையாட்டு நடைபெறவிருக்கிறது. இந்த விளையாட்டில் கலந்து கொள்ள ஸ்மார்ட் ஃபோன் கையிலிருந்தால் போதும். மூன்று பேர் கொண்ட குழுவாகத்தான் போட்டியில் பங்கேற்க முடியும். போட்டியாளர்கள் குழுவாக தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். குழு ஒன்றிற்கு பதிவுக் கட்டணம் 600 ரூபாய். போட்டிக்கென்று சில ஆட்ட விதிமுறைகள் உண்டு. நெறியாளர்கள் அவற்றைப் பட்டியலிட்டுள்ளனர். விதிமுறைகளை மீறும் குழுவானது போட்டியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விலக்கப்பட்டு விடும். இந்த விளையாட்டுப் போட்டியில் முதற்பரிசு வெல்வோருக்கு பரிசுத் தொகை ரூபாய் 7500, இரண்டாம் பரிசு 4500 ரூபாய், மூன்றாம் பரிசு 3000.
இடம்: ஆஷா நிவாஸ் சோசியல் சர்வீஸ் செண்ட்டர், நுங்கம்பாக்கம், 9, ரூத்லேண்ட் கேட், 5 வது சாலை, சென்னை, தமிழ்நாடு- 600006.
நாள்: ஃபிப்ரவரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மேலதிக தகவல்களைப் பெற... 7010274078, 96001 00428, 99402 53531 எனும் எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.