தனிநபர்  ‘சைபர் கிரைம் இன்ஸூரன்ஸ்’ காப்பீடு - ஆன்லைன் திருட்டுகளைச் சமாளிக்கப் பிறந்த புதிய திட்டம்! 

கடந்த தலைமுமுறை வரை தனிமனிதர்களுக்கான பொருளாதார இழப்பு அச்சுறுத்தல் என்பது பெரும்பாலும் பிக்பாக்கெட் மாதிரியான திருட்டுக்களாகவே இருந்து வந்தது. ஆனால் இப்போது இணையப் புழக்கம்
தனிநபர்  ‘சைபர் கிரைம் இன்ஸூரன்ஸ்’ காப்பீடு - ஆன்லைன் திருட்டுகளைச் சமாளிக்கப் பிறந்த புதிய திட்டம்! 

இந்தியாவில் முதன்முறையாக சைபர் கிரைம் எனப்படும் இணையம் அடிப்படையிலான குற்றங்களுக்கு எதிராக காப்பீடு செய்து கொள்ளும் வகையில் புதிதாக ‘தனிநபர் சைபர் கிரைம் காப்பீட்டுத் திட்டம்’ ஒன்று பஜாஜ் அல்லையன்ஸ் ஜெனரல் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த  சைபர் கிரைம் இன்ஸூரன்ஸ் திட்டத்தின் மூலமாக ஆன்லைன் பணப்பரிமாற்றத்தின் போது தகவல்கள் திருடப்பட்டு ஏற்படும் பண இழப்பு, தனிநபர் அடையாளத் திருட்டு, ஆன்லைன் மூலமாக சம்மந்தப்பட்ட நபருக்குத் தெரியாமல் நடத்தப்படும் முறைகேடான பின் தொடர்தல், மால்வேர் தாக்குதல் போன்ற  சைபர் கிரைம் குற்றங்களினால் தனிநபருக்கு ஏற்படக்கூடிய பொருளிழப்பை ஈடு செய்ய முடியும் என்கிறது  பஜாஜ் அல்லையன்ஸ் நிறுவனம்.

கடந்த தலைமுமுறை வரை தனிமனிதர்களுக்கான பொருளாதார இழப்பு அச்சுறுத்தல் என்பது பெரும்பாலும் பிக்பாக்கெட் மாதிரியான திருட்டுக்களாகவே இருந்து வந்தது. ஆனால் இப்போது இணையப் புழக்கம் அதிகரித்து வரும் எதிர்காலங்களில் இணையம் மற்றும் இ- காமர்ஸ் பயனர்களின் எண்ணிக்கை அபிரிமிதமாகி வருகிறது. எனவே  இன்றைய காலகட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கையும் மிகுதியாகிக் கொண்டே செல்கிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு காரணங்களுக்காக லேப்டாப், ஸ்மார்ட் ஃபோன், டேப்லாய்டு, எனப் பலவகைகளில் நமது தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. ஆன்லைனில் சேமிக்கப்படும் தகவல்கள் அதிகரிக்க, அதிகரிக்க அவற்றின் பாதுகாப்பு குறித்த அச்சங்களும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

இந்த முறையில்  காப்பீடு செய்து கொள்வதற்கான குறைந்த பட்சக் காப்பீட்டுத் தொகை 1 லட்சம் ரூபாய் முதல் உச்ச வரம்பு 1 கோடி ரூபாய் வரை நிர்ணயித்திருக்கிறார்கள். காப்பீட்டுக்கான பிரீமியத்தொகைக்கான அட்டவணையை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.  பிரீமியத் தொகைக்கான வரம்பு ஒவ்வொரு தனிநபரும் இணையத்தில் நாளொன்றுக்கு எத்தனை மணி நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் பொறுத்து மாறும் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல இந்த முறையில் காப்பீடு செய்து கொள்ளும் நபர்கள் தங்களுக்கான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை அவரவருக்குச் சொந்தமான தனிப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் லேப் டாப்கள் அல்லது அலுவலக கம்ப்யூட்டர்கள் வாயிலாக மட்டுமே நிகழ்த்த வேண்டும் தவிர  பலர் புழங்கும் சைபர் கஃபேக்களிலோ அல்லது சந்தேகத்திற்கிடமான வேறு இடங்களிலோ ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை நிகழ்த்தக் கூடாது என்பது இம்முறையில் காப்பீடு செய்து கொள்பவர்களுக்கான விதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com