பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2 வயதுக் குழந்தையின் இன்றைய நிலை?!

இப்போது யாரேனும் ஆர்டியிடம் புகைப்பதற்கு சிகரெட்டுகள் வழங்கினார்கள் எனில், அவர்களிடம் ஆர்டி சொல்லும் பதில்; ஐ லவ் காக் செடொ (ஆர்டியின் மனநலவியல் மருத்துவர்களில் ஒருவர்) நான் புகைத்தால் அவர் மிகவும்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:33 pm IST

2010 ஆம் வருடத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆர்டி ரிஸல் எனும் இந்த 2 வயதுச் சிறுவன் திடீரென ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானான். எதற்கென்று தெரியுமா? 2 வயது என்பதே குழந்தைப் பருவம் தான், அந்த அறியாக் குழந்தைப் பருவத்தில் இந்தச் சிறுவன் நாளொன்றுக்கு 40 சிகரெட் வரை தொடர்ந்து அசால்ட்டாக ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். இந்த சிகரெட் கணக்குகள் கூட தோராயமாக அவனது பெற்றோர் சொன்ன அளவீடுகளே! அந்த அளவுக்கு சிகரெட் மீது அவனுக்கு அளவில்லாத மோகம் இருந்தது. சிகரெட் பழக்கம் மட்டுமல்ல ரிஸலுக்கு அளவில்லாமல் அபிரிமிதமாகச் சாப்பிடும் வழக்கமும் இருந்திருக்கிறது. இதனால் உடல்பருமனாலும் தொடர்ந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.

பின்னர், ஊடகங்களில் வெளியான அவனது கதை பலரது கோபங்களைத் தூண்டியது, அந்தக் கோபம்... இந்தோனேசிய அரசை குழந்தை பருவப் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியது. அதைத் தொடர்ந்து ரிஸலுக்கு புகைபிடிக்கும் பழக்கத்திற்காக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. புகைப்பழக்கத்துக்கு அடிமையாகும் போது ஆர்டிக்கு 2 வயது தான் ஆகியிருந்தது. புகை அடிமைப் பழக்கத்திலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வர மறுமலர்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டான். அங்கிருந்து தற்போது தனது புகை அடிமைத்தனத்திலிருந்து மீண்டிருக்கும் ஆர்டிக்கு இப்போது 8 வயதாகிறது. ஆனாலும் குழந்தைப் பருவத்திலிருந்து பழக்கமாகி விட்ட ஒரு அடிமைத்தனத்திலிருந்து மீள்வதென்பது அவனுக்கு அத்தனை எளிதான விஷயமாக இல்லை.

Story image

அப்படித்தான் புகைப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முயற்சித்து கடைசியில் ஆர்டி, தொடர்ந்து இடைவிடாமல் உண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டான். இது எல்லோருடைய வாழ்க்கையிலுமே நிகழக்கூடிய ஒரு சோகம் தான். ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைத்து பிறிதொன்றில் மாட்டிக் கொள்வதை எப்படி மீட்சி என்று கருத முடியும். அதனால் ஆர்டியின் பெற்றோர் கவலையில் ஆழ்ந்தனர்.

ஆர்டியின் அம்மா டயானேவின் கூற்றுப்படி, இப்போது யாரேனும் ஆர்டியிடம் புகைப்பதற்கு சிகரெட்டுகள் வழங்கினார்கள் எனில், அவர்களிடம் ஆர்டி சொல்லும் பதில்; ஐ லவ் காக் செடொ (ஆர்டியின் மனநலவியல் மருத்துவர்களில் ஒருவர்) நான் புகைத்தால் அவர் மிகவும் மனம் வருந்துவார் என்பதோடு என்னை நானே சுகவீனனாகவும் ஆக்கிக் கொண்டவனாவேன்.’ அதனால் எனக்கு சிக்ரெட்டுகள் எப்போதுமே வேண்டவே வேண்டாம் என்கிறானாம். ஆர்டியைப் பொருத்தவரை இது மிக நல்ல முன்னேற்றம் தான்!

தற்போது தனது அளவில்லாமல் உண்ணும் பழக்கத்துக்காகவும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வரும் ஆர்டி. கூடிய விரைவில் அந்த அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட்டு விடுவான் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஆர்டியின் அம்மா!

அன்று ஒபிசிட்டியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆர்டியின் இன்றைய தோற்றம் இது தான்.

Story image

Article concept & Image courtesy : allindiaroundup.com
 

Related Article

சல்வார் கமீஸ் உங்களுக்குப் பிடித்த உடையா? அப்படியெனில் இந்த 9 விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

மைசூரு சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘டூரிஸ்ட் போலீஸ் / டூரிஸ்ட் மித்ரா’ திட்டங்கள்!

குழந்தைகள் சேட்டை செய்தால் அவர்களுக்கு மரணத்தைப் பரிசளிப்பதா? என்ன ஒரு அரக்கத்தனம்?!

ஆன்லைன் ஷாப்பிங்கில் நிபுணராக விரும்புகிறீர்களா?

ஒரு மில்லினர் வீட்டு ‘ஸோ சிம்பிள்’ திருமணம்... இரண்டு கம்ப்யூட்டர்கள் மட்டுமே திருமணச் செலவாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.