மைசூரு சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘டூரிஸ்ட் போலீஸ் / டூரிஸ்ட் மித்ரா’ திட்டங்கள்!

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நிலவும் இந்த பனிப்போரை தளர்த்தும் வண்ணம் காவலர்களுக்கு வழக்கமான யூனிஃபார்ம்களைத் தவிர்த்து, மக்கள் பார்வையில் நட்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ‘டூரிஸ்ட் போலீஸ்’
மைசூரு சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘டூரிஸ்ட் போலீஸ் / டூரிஸ்ட் மித்ரா’ திட்டங்கள்!

கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவின் பேரில் மைசூர் காவல்துறையில் புதிதாக ‘டூரிஸ்ட் போலீஸ்’ என்றொரு பிரிவு துவக்கப்பட இருக்கிறதாம். ஆண்டு தோறும் மைசூரு அரண்மனை, மைசூரு விலங்கியல் பூங்கா, சாமுண்டி ஹில்ஸ் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மைசூரு அரண்மனையைப் பார்வையிட மட்டும் ஆண்டொன்றுக்கு 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். அதற்குச் சற்றும் குறையாமல் மைசூர் விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். விழாக்காலங்களில் மைசூரு சாமுண்டி ஹில்ஸ் கோயில் பகுதியில் நிலவும் நெருக்கடியோ சொல்லி மாளாது. லட்சக்கணக்கான மக்கள் சாமுண்டீஸ்வரியின் தரிசனம் காண வந்து செல்கிறார்கள்.

இப்படி மைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயல் மாநில பக்தர்கள் கூட்ட நெருக்கடியில் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் திருடர்கள் கையில் சிக்கி அவதிப்பட்ட கதைகள் மைசூரு காவல்துறை கிரைம் ஹிஸ்டரியில் நிறைய உண்டு. எனவே மைசூருக்கு சுற்றுலாவுக்காகவோ அல்லது தரிசனத்துக்காகவோ வரும் அயல் மாநில விருந்தினர்களை அவர்களது பயண நோக்கம் கெடாது பாதுகாத்து உபசரித்து அனுப்பி வைப்பது மைசூர் காவல்துறையின் கடமையும் கூட!

ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் சுற்றுலாத்தலங்களில் தங்களுக்கு நேரும் பொருட்கள் திருடு போதல் உள்ளிட்ட சிறு, சிறு பிரச்னைகளுக்காக காவல்துறையை அணுக விரும்புவதில்லை. ஏனெனில் பல இடங்களில் காவல்துறை, அயலூர் மக்களின் புகார்களுக்கு பெரிதாக ரெஸ்பாண்ட் செய்வதில்லை எனும் மனக்குறை பொதுமக்களுக்கு உண்டு. எனவே எதற்கு சுற்றுலா வந்த இடத்தில் தேவையற்ற பிரச்னை என்றெண்ணி பலரும் புகாரளிக்காமல் தவிர்த்து விடுவதே வழக்கம். 

எனவே மைசூரு நகரில் மட்டுமேனும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நிலவும் இந்த பனிப்போரை தளர்த்தும் வண்ணம் காவலர்களுக்கு வழக்கமான யூனிஃபார்ம்களைத் தவிர்த்து, மக்கள் பார்வையில் நட்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ‘டூரிஸ்ட் போலீஸ்’ என்று பேட்ஜ் அணிந்து கொண்டு பணியிலிருந்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு வழக்கமாக காவல்துறை என்றாலே தோன்றக்கூடிய அலர்ஜி குறையும் என மைசூரு உள்துறை அமைச்சர் நினைத்தார்.

அந்த நினைப்பை உடனடியாகச் செயல்படுத்தச் சொல்லி மைசூரு கமிஷனர் A S ராவ்க்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது மைசூரு சுற்றுலாத்துறை ‘டூரிஸ்ட் மித்ரா’ (சுற்றுலாப் பயணிகளின் நண்பன்)என்ற பெயரில் மைசூர் உட்பட 13 கர்நாடக மாவட்டங்களில் தேர்ச்சி பெற்ற சுற்றுலாப் பாதுகாவலர்களை நியமித்ததும் டூரிஸ்ட் போலீஸ் திட்டம் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

Thanks to ucnews.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com