ஹெல்மெட் அணியாதவர்களுக்கு லக்னெள போலீஸார் அளித்த வித்யாசமான விழிப்புணர்வுப் பரிசு!

இதில், இந்தப் பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள போலீஸார் கையாண்ட புதுமையான விழிப்புணர்வுப் பிரச்சாரம் தான் பண்டிகையின் ஹைலைட்!
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு லக்னெள போலீஸார் அளித்த வித்யாசமான விழிப்புணர்வுப் பரிசு!
Published on
Updated on
1 min read

நேற்று வட இந்தியாவில் சில மாநிலங்களில் கர்வா செளத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இது 4 நாட்களுக்கு நடைபெறும் ஒரு புராதனப் பண்டிகை. இதன் நோக்கம், கர்வ செளத் பண்டிகை தினத்தில் சுமங்கலிப் பெண்கள் காலையில் கண் விழித்தது முதலே பல்லில் பச்சைத் தண்ணீர் கூடப் படாமல் விரதம் இருந்து தமது கணவரின் ஆரோக்யம் மற்றும் பாதுகாப்புக்காக கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும் என்பதாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.  அதன் படி விரதமிருக்கும் பெண்கள் மாலையில் முழு நிலவு தோன்றியதும், ஒரு வெள்ளி சல்லடை வழியாக முழு நிலவைப் பார்த்த கையோடு அப்படியே அதை இறக்கி அதன் வழியே தங்களது கணவரின் முகம் கண்டு, அவரது கையால் இனிப்பை உண்ட பின் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இந்த விரதமுறை. நேற்று அந்தப் பண்டிகை ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோலகலமாகக் கொண்டாடப் பட்டது. 

இதில், இந்தப் பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள போலீஸார் கையாண்ட புதுமையான விழிப்புணர்வுப் பிரச்சாரம் தான் பண்டிகையின் ஹைலைட்!

லக்னெள போக்குவரத்துப் போலீஸார், நேற்று சாலையில் தங்களைக் கடந்த வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதிகளை எல்லாம் மடக்கிப் பிடித்து ஃபைன் போட்டதோடு மட்டுமல்லாமல், அவர்களது மனைவிமார்களிடம் இனிமேல் கணவர்கள் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்ட முயன்றால் அதைக் கவனித்து பொறுப்பாக அவர்களிடம் ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்துரைத்து ஹெல்மெட் அணிவதின் பாதுகாப்பு அம்சத்தை உணர்த்த வேண்டியது மனைவிகளின் கடமை என போதித்தனர். அதோடு மட்டுமல்ல, ஃபைன் வசூலித்த அத்தனை பேருக்குமே தலா ஒரு ஹெல்மெட் வேறு இலவசமாக அளித்து அனுப்பினார்களாம். இது நிச்சயம் புதுமை தான். ஏனெனில், போக்குவரத்துப் போலீஸார் என்றாலே, ஃபைன் வசூலிப்பதை மட்டும் தான் கடமையாகச் செய்யக்கூடியவர்கள் என்றொரு பழிச்சொல் அவர்கள் மீது உண்டு. ஆனால் இம்முறை, அவர்கள் வித்யாசமாக யோசித்து, லக்னெள தம்பதிகளிடையே ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்திய விதம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே!

Image courtesy: better india.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com