அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது?

வெயில்காலங்களில் அவ்வளவாக பிரச்னை இருக்காது. மழை மற்றும் குளிர்காலங்களில்
அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது?

வெயில்காலங்களில் அவ்வளவாக பிரச்னை இருக்காது. மழை மற்றும் குளிர்காலங்களில் தான் தானியங்களில் அதிக அளவில் வண்டுகள் வர ஆரம்பிக்கும். அப்படி நாம் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் மாவு மற்றும் அரிசி, பருப்பு ஆகியவற்றில் வண்டு வராமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.

பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத் தூள் கலந்து நிழலில் உலர்த்தி பிறகு டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும்,  வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரிசியில் மிளகாய் வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.

புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காய வைத்து சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் போட்டு வைத்தால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.

தனியா டப்பாவில் நாலைந்து துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் அண்டாமல் இருக்கும்.

சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் போதும் பூச்சிகள் வராது.

அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் பூச்சிகள் வராது.

எந்த பொருளாக இருந்தாலும் அப்படியே வைத்தால் பூச்சி பிடித்து விடும். அவ்வப்போது சூரிய ஒளியில் வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com