ஒரு தலையணைக்குப் போய் இத்தனை விலையா? என்று அதிசயமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பாருங்கள் அதன் பலனைப் பற்றி யோசித்துப் பார்க்கையில்... பணமிருப்பவர்களுக்கு போனால் போகிறது ஒரு தலையணை வாங்கிப் போட்டு விட்டால் தேவலாம் என்று கூடத் தோன்றலாம். அப்படியொரு அசாத்திய பலன் இதற்குண்டு.
உலகில் யானைப்படைக்கு கூட அசராதவர்கள் இருக்கலாம், ஆனால் ஆழ்ந்து உறங்கும் போது சக ஸ்லீப்மேட்டுகளிடமிருந்து (கூடச் சேர்ந்து தூங்கறவங்களை ஸ்லீப்மேட்னு சொன்னா தப்பில்லை) கிளர்ந்தெழுந்து வரக்கூடிய லெளட்ஸ்பீக்கர் டைப் குறட்டைகளைக் கண்டு பயந்து போய் மிரளாதவர்கள் இந்த உலகிலேயே இல்லை. அப்படியாப்பட்ட குறட்டை அரக்கனை இனம்கண்டு குறட்டையொலி முற்றும் போதெல்லாம் சம்மந்தப்பட்டவர்களுக்கு ‘ஏய் நீ ரொம்பத்தான் குறட்டை விடறேப்பா... கொஞ்சம் நகர்ந்து படு... குறட்டை நிற்கும்’ என எச்சரிக்கை தருமாம் இந்தத்தலையணை.
இப்படியான எச்சரிக்கைகளை வழங்கும் வகையில் இந்தத் தலையணையின் உள்ளே 8 பில்ட் இன் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தூங்கும் போது அவற்றில் பாட்டு கேட்கலாம், ஆடியோ புத்தகங்களை வாசிக்கலாம். உங்களது முந்தைய, பிந்தைய ஸ்லீப் ரெகார்டுகளை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்தத் தலையணையின் உறை ஹைப்போ அலர்ஜெனிக் மெட்டீரியலால் உருவாக்கப்பட்டுள்ளது. தலையணையின் உள்ளே தலை மற்றும் பின் கழுத்துப் பகுதியின் செளகர்யத்துக்காக அதி மிருதுத்தன்மை வாய்ந்த மெமரி ஃபோம் பயன்படுத்தப் பட்டுள்ளது.
அப்படியானால் இந்தத் தலையணையின் விலை 14,000 ரூபாய் என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்கிறீர்களா?! இந்தத் தலையணை மார்க்கெட்டில் புதுசு. இந்தியாவில் இன்னும் விற்பனை தொடங்கியிருக்க சாத்தியமில்லாமலும் இருக்கலாம். இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள வசதியுண்டு என்கிறது இதன் தயாரிப்பு நிறுவனம்.
மேலதிக விவரங்களுக்கு shop.rem-fit.com/ எனும் இணையதளத்தை அணுகலாம்.
Related Article
தண்ணீரைக் குடித்த உடன் மறைந்து போகும் பாட்டில் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
உலகையே அங்குலம் அங்குலமாக அளக்கும் 'கூகுள் எர்த்'
எலக்ட்ரானிக் கைப்பை போல வேலையை எளிதாக்கித் தரும் மைக்ரோசிப் இம்ப்ளாண்ட்!
காலி டிரம்களை வைத்து இப்படி வித்யாசமாக ஏதாவது முயற்சி செய்யுங்களேன்!
ஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் முத்திரைப் பதித்த ஆப்பிள்: போட்டியின்றி முதலிடம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமூகநீதி கணக்காய்வு: பாமக வரவேற்பு
ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து

ராம்லீலா மைதானத்தில் உணவுத் திருவிழா: டிசம்பரில் நடத்த அரசு திட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி? நயினாா் நாகேந்திரன் கேள்வி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



