வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!

நடிகை ஜூஹி சாவ்லா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் வாழைமரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேசிய வழக்கத்தைப் பற்றி சுருக்கமாக விளக்கியிருந்தார்
Updated on
1 min read

நடிகை ஜூஹி சாவ்லா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் வாழைமரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேசிய வழக்கத்தைப் பற்றி சுருக்கமாக விளக்கியிருந்தார்.

அதாவது இந்தோனேசியர்கள் தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்க வீணாக வெட்டி வீசப்பட்ட வாழைமரத் தண்டுகளைத் தேர்ந்தெடுத்து துளைகளிட்டு அதில் மண் மற்றும் உரத்தை நிரப்பி, அந்த மண்ணில் கீரைகள் மற்றும் காய்கறி விதைகளை விதைத்து புது விதமான விவசாயமொன்றைச் செய்து வருகிறார்கள். இம்முறையில் விவசாயம் செய்யும் போது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை வாழைமரத்தண்டில் இருக்கும் நீர்ச்சத்தே செடிகள் வளரப் போதுமான நீர்த்தேவையை வழங்கி விடுகின்றன என்பதோடு பயன்படுத்தி முடிவுக்கு வரும் வாழைமரத்தண்டுகளை அப்புறப் படுத்த வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லாமலாகிறது.

ஜூஹியின் ட்விட்டர் பகிர்வு...
ஜூஹியின் ட்விட்டர் பகிர்வு...

காய்கறிகளையும், கீரைகளையும் பறிந்த பிறகு இந்த வாழைமரத்தண்டுகளை அப்படியே விட்டு விட்டால் அவை மண்ணோடு மண்ணாக மக்கி மீண்டும் மண்ணுக்குத் தேவையான சத்துக்களை வழங்கும் உரமாக மாறிவிடுகிறது. இம்முறையில் விவசாயம் செய்ய மிகக்குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படலாம். ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நமது இந்தியா போன்ற பிரதேசங்களில் விவசாயத்திற்கு இத்தகைய நவீன மாற்று வழிமுறைகளைக் கையாண்டால் நன்றாக இருக்குமே! 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com