40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டால் அவர்களுக்கு எடுக்கப் படும் முதல் டெஸ்டுகளில் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது HB count என்று சொல்லப்படக்கூடிய இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கைகளுக்குத் தான்.
1 டெஸிலிட்டர் ரத்தத்தில்;
பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
இந்த எண்ணிக்கை சில பெண்களுக்கு மிகக் குறைவாக அமைந்து விட்டால் அவர்களை எவ்விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் உட்படுத்தமுடியாது. அத்தகையவர்களை மருத்துவர்கள் ஹீமோ குளோபின் அதிகமிருக்கும் உணவு வகைகளைச் சாப்பிடச் சொல்லியும் இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குகளையும், மாத்திரை மருந்துகளைச் சாப்பிட்டு ரத்தத்தில் சிவப்பு அணுக்களான ஹீமோ குளோபின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வரச் சொல்லி பரிந்துரைப்பார்கள். பொதுவாக இரும்புச் சத்து அதிகமுள்ள டானிக்குகளை உட்கொள்ளும் போதும் சரி, மாத்திரைகளை உட்கொள்ளும் போதும் சரி நிறையத் தண்ணீர் அருந்த வேண்டும். அல்லது நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு மலச்சிக்கல் அவஸ்தை நேரும்.
அதனால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் வெறும் மாத்திரை, மருந்துகளை நம்பி மட்டுமே தங்களது சிவப்பணுக்கள் எண்ணிக்கையை உயர்த்துவதைக் காட்டிலும் இயற்கையாகவே இரும்புச் சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், கீரைகள் உள்ளிட்ட உணவு வகைகளை அன்றாடம் தங்களது சப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் சிவப்பணு எண்ணிக்கையும் உயரும் மலச்சிக்கலில் இருந்தும் தப்பலாம். அந்த வகையில் பெண்கள் தங்களது உடலில் சராசரி ஹீமோ குளோபின் அளவை பராமரிக்க தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பொருட்களை கீழே பட்டியலிட்டுள்ளோம். பாட்டி, அம்மா, அத்தை, சித்தி, பெரியம்மா, அக்கா, அண்ணி, நாத்தனார், மாமியார், தங்கை, தோழி என எந்த உறவு நிலையில் இருக்கும் பெண்களென்றாலும் சரி அவர்கள் அனைவருக்கும் மறக்காமல் இந்த உணவுப் பட்டியலைத் தெரியப்படுத்தி தினமும் சாப்பிடச் சொல்லி அறுவுறுத்துங்கள். அப்புறம் ஹீமோகுளோபின் எண்ணிக்கை எப்படிக் குறையும் என்று ஒரு கை பார்க்கலாம்.
ரத்தத்தில் ஹீமோ குளோபின் எண்ணிக்கையை உயர்த்தும் உணவுகள்
- முருங்கைக்கீரை
- சுண்டைக்காய் (காயாகவும், வற்றல் செய்தும் உணவில் சேர்க்கலாம்.)
- சிவப்பு முக்கடலை (நாட்டு முக்கடலை)
- பாசிப்பயறு (அவித்தோ முளைகட்டியோ சாப்பிடலாம்)
- மணத்தக்காளி வற்றல்
- எள்ளுருண்டை
- அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை,
- கருப்புத் திராட்சை (விதை நீக்கியது அல்ல), நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை
- கறிவேப்பிலைத் துவையல்
- பீர்க்கங்காய் (இதை குழம்பு, பொரியல், கூட்டு, துவையல் எனப் பலவிதமாகப் பயன்படுத்தலாம்)
- பிரண்டை (புளி சேர்த்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம்)
- முள்ளங்கி (சாறு எடுத்தும் சூப் செய்தும் அருந்தலாம், பொரியல், அவியல் செய்தும் சேர்க்கலாம்)
- பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி
- உளுந்து, கேழ்வரகு தோசை,
- பொன்னாங்கன்னி கீரை
- தண்டுக்கீரை அல்லது முளைக்கீரை
- வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்,
- மலைநெல்லிக்காய்ச் சாறு, பழரசம்,
- பனைவெல்லப் பாகில் புரட்டிய சிறு தானிய மாவுருண்டை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

மேக்கேதாட்டு தனித்தீர்மானம்: தமிழக எம்.பி., எம்எல்ஏக்கள் மத்திய அரசிடம் நேரில் வழங்க வேண்டும்

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



