மிஸ் இந்தியா 2018 அனுக்ரீத்தி வாஸ் இன்றைய இளம்பெண்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி!

மிஸ் இந்தியா 2018 அனுக்ரீத்தி வாஸ் இன்றைய இளம்பெண்களிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி... 
மிஸ் இந்தியா 2018 அனுக்ரீத்தி வாஸ் இன்றைய இளம்பெண்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி!
Published on
Updated on
2 min read

‘தினமும் இரவு தூங்கி, காலையில் கண்விழிக்கும் போது புதுப் புது கனவுகளுடன் விழித்தெழுங்கள். அந்தக் கனவு உங்களுடையது. அதை ஈடேறச் செய்ய நீங்கள் உழைக்க வேண்டும். அந்தக் கனவை உங்களால் சாத்தியப்படுத்த முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றியெல்லாம் பிறகு யோசித்துக் கொள்ளலாம். ஆனால், அதற்காக உழைப்பதை மட்டும் நிறுத்தாதீர்கள். உங்களது கனவிற்கான உழைப்பு அதை சாத்தியப்படுத்தும் என்று நம்புங்கள். எந்தப் போட்டியில் கலந்து கொள்வதாக இருந்தாலும், குழப்பமின்றி அதற்கான முழு அர்ப்பணிப்பு உணர்வுடன், ஈடுபாட்டுடன் உங்கள் உழைப்பை வழங்கத் தவறாதீர்கள். அதற்கான பலனை உங்களால் நிச்சயம் அறுவடை செய்ய முடியும். திருச்சியில் ஒரு மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த என்னால் மிஸ் இந்தியாவாக முடிகிறதென்றால் காரணம் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதென முடிவெடுத்த பின் அதற்காக நான் வழங்கத் தயாராக இருந்த எனது உழைப்பும், முழு அர்ப்பணிப்பு உணர்வும் தான். மிஸ் இந்தியாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்துப் பார்த்தது இல்லை. அடிப்படையில் நான் ஒரு தடகள வீரங்கனை. அதனால் உடலை ஃபிட் ஆக வைத்துக் கொள்வது இயல்பிலேயே அமைந்து விட்டது. டி.வி முன்பும், ஸ்மார்ட் ஃபோனிலுமாக நாம் செலவழிக்கக் கூடிய நேரங்களை அப்படியே வெளியில் இறங்கி விளையாட்டு மைதானங்களில் செலவழித்தால் கிடைத்து விடக்கூடிய விஷயம் தான் ஃபிட்னஸ். அதைத்தாண்டி, ஆரோக்யமான உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை நாமாகத்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஜங்க் வகை உணவுகளைத் தவிர்ப்பதை கட்டாயமாக்கிக் கொண்டால் போதும். நான் இன்றூ மிஸ் இந்தியா ஆகி விட்டதால் அதற்காகா நாள் முழுக்க ஜிம்மில் பலி கிடந்தேன் என்று சொல்ல முடியாது. மிஸ் இந்தியாவில் நாமினேட் செய்யப்பட்ட பிறகு தான் ஜிம்முக்குச் செல்லும் வழக்கமே ஏற்பட்டது. அதனால், அதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் தங்களுக்கென தனி டிரெயினர்கள், ஃபேஷன் டிசைனர்கள் வைத்துக் கொள்வார்கள். நடிகைகள் எல்லாம் கூட இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வரிசை கட்டி நிற்பார்கள். ஆனால், அதைப்பற்றி எல்லாம் அச்சம் கொள்ளாமல் நாம் எதற்காக முயற்சிக்கிறோமோ அதற்கான முழு உழைப்பையும் அதற்குக் கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு இன்று நான் உதாரணமாகி இருக்கிறேன்.  இணையத்தில் இப்போதும் கூட ‘அதெப்படி டஸ்கி ஸ்கின் கொண்ட (மாநிறம்) ஒரு தென்னிந்தியப் பெண் மிஸ் இந்தியாவானாள்? பளீர் நிறம் கொண்ட அழகழகான வட இந்தியப் பெண்கள் நிறையப் பேர் அழகுப் போட்டியில் கலந்து கொள்வார்களே? அவர்களைத் தாண்டி இந்தப் பெண்ணால் எப்படி மிஸ் இந்தியாவாக முடிந்தது? என்றெல்லாம் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட முடியாது. அடுத்து டிசம்பரில் நடைபெறவிருக்கும் மிஸ் வேர்ல்டு 2018 போட்டிக்கான முன்னேற்பாடுகளில் நான் கவனமாக இருக்கிறேன். அதற்காக மும்பை போக வேண்டும். சினிமா வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால், இப்போதைக்கு என்னுடைய முதல் கவனம் மிஸ் வேர்ல்டு மட்டுமே. ஏனெனில், மனுஷி சில்லர் பத்தாண்டுகளுக்குப் பின் மிகக் கடினமாக உழைத்து சென்ற ஆண்டு இந்தியாவுக்கு உலக அழகி பட்டத்தைப் பெற்றுத்தந்திருக்கிறார். அதை தக்க வைத்துக் கொள்ள நான் உழைக்க வேண்டும்.

எனக்கு மிகப்பிடித்த உலக அழகிகள் என்றால் முதலில் ஐஸ்வர்யா ராய், அவரையடுத்து மனுஷியை ரொம்பப் பிடிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com