பள்ளிக்கு தாமதமாக வந்தால் சிலுவையில் அறைவதா? இதென்ன கொடுமை?!

பள்ளி நிர்வாகத்தின் இச்செயலை பொதுமக்களில் சிலர் தட்டிக் கேட்கையில் அப்படிக் கேட்டவர்களையும் பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியரும் தாக்க முயன்றிருக்கிறார்கள்.
பள்ளிக்கு தாமதமாக வந்தால் சிலுவையில் அறைவதா? இதென்ன கொடுமை?!

பள்ளிக்குத் தாமதமாக வந்ததற்காக மூன்று நைஜீரிய மாணவர்களை அடித்து, உதைத்து சிலுவையில் கட்டிப் போட்டு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர் மற்றும் வகுப்பாசிரியர் மூவரும் கூட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது இந்தியாவில் அல்ல, நைஜீரியாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அரங்கேறியுள்ளது. நைஜீரியாவின் அகுஜாவில் உள்ள தனியார் பள்ளியொன்றில் பயின்று வந்த மூன்று மாணவர்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் இருவரும் இணைந்து கடுமையாக மிரட்டி, அடித்து, உதைத்து சிலுவை போன்ற தோற்றம் கொண்ட மரத்தில் கட்டிப்போட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர். இந்த மரச்சிலுவை அமைப்பு தாமதமாக வரும் மாணவர்களைக் கட்டிப் போட்டு சித்ரவதை செய்வதற்காகவே அங்கே அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். விஷயமறிந்து பள்ளி நிர்வாகத்தின் இச்செயலை பொதுமக்களில் சிலர் தட்டிக் கேட்கையில் அப்படிக் கேட்டவர்களையும் பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியரும் தாக்க முயன்றிருக்கிறார்கள். இதனால் கொதித்தெழுந்த மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கை. அந்தப் புகாரை ஒட்டி தற்போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.

நைஜீரியப் பள்ளிகளில் பொதுவாக பள்ளிக்கு தாமதமாக வருதல், பாடங்களில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுத்தனமாக இருத்தல், உடன் பயிலும் மாணவர்களுடன் தகராறில் ஈடுபடுதல் உள்ளிட்ட குறும்புத் தனமான மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதும், மிரட்டுவதும் சர்வ சாதாரணமான செயல். பள்ளியின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எனக்கருதி அரசும், சட்டமும் அங்கே அதை அனுமதிக்கிறது. ஆனால், பல தனியார் பள்ளிகள் இந்த வாய்ப்பை சிறு சிறு தவறுகளுக்காகக் கூட மாணவர்களை சித்ரவதை செய்யக் கிடைத்த  வாய்ப்பாகக் கருதுவதால் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியரிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

சிறுவர்களுக்கு எதிரான மூர்க்கமான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும், தாக்குதல்களையும் தடை செய்யக் கோரும் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பு ஏற்படுத்திய உறுப்பு நாடுகள் 60 ன் கீழ் நைஜீரியா இல்லை. நைஜீரியாவிலும் அதை சட்டப்பூர்வமாக்கும்படியான கோரிக்கை தற்போது அங்கு வலுத்து வருகிறது.

ஐ.நா குழந்தைகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி குழந்தைகளில் 2 முதல் 4 வயதுக்குட்பட்டோர் தங்களது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்த அனுபவத்தை அவரவர் பெற்றோரிடமிருந்தே பெற்றுக் கொள்வதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் அளித்து அவர்களை ஒழுங்கான நடவடிக்கைகளில் திருப்ப வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com