விமானத்துக்கு வெளியே காற்றால் தூக்கி வீசப்பட்டு சீட் பெல்ட் உதவியால் உயிர் மீண்ட கோ பைலட்!

விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியே பாதி உடல் காற்றில் வெளியே பறந்து கபால மோட்சம் அடையக் காத்திருந்து மீண்டும்  சீட் பெல்ட் கவசத்தால் விமானத்துக்குள் விழுந்தால் எப்படி இருக்கும்?
விமானத்துக்கு வெளியே காற்றால் தூக்கி வீசப்பட்டு சீட் பெல்ட் உதவியால் உயிர் மீண்ட கோ பைலட்!
Published on
Updated on
2 min read

விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியே பாதி உடல் காற்றில் வெளியே பறந்து கபால மோட்சம் அடையக் காத்திருந்து மீண்டும்  சீட் பெல்ட் கவசத்தால் விமானத்துக்குள் விழுந்தால் எப்படி இருக்கும்? அந்தக் காட்சியை கற்பனை செய்யும் போதே சிலருக்கு நெஞ்சுக்குள் ஐஸ் கத்தியைச் சொருகியது போலிருக்கலாம். உயிர் பயத்தில் மயிர் கூச்செரியச் செய்யத்தக்க நிமிடங்கள் அவை.

சிலர் கூறலாம் இதென்ன பிரமாதம்? பாரா கிளைடிங், ஃபங்கி ஜம்ப் போலத்தானே இதுவும் என்று. நன்றாகக் கவனியுங்கள் அவையெல்லாம் த்ரில் விளையாட்டுக்கள் என்று தெரிந்தே நாம் அட்வெஞ்சர் விளையாட்டு மோகத்தால் போதுமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் ஆடக்கூடியவை. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வு சமீபத்தில் சீன விமானமொன்றின் காக்பிட்டில் பைலட்டுக்குத் துணையாகப் பயணித்த கோ பைலட் ஒருவருக்கு நேர்ந்திருக்கிறது. ஆம், அந்த விமானத்தின் வின்ட் ஷீல்டு என்று சொல்லப்படக் கூடிய விமானத்தின் முன்புறக் கண்ணாடி ஜன்னல் போன்ற அமைப்பு காற்றுக்கு கீறல் விட்டுப் பிளந்து கொண்டு முற்றிலுமாக உடைந்து சிதற உள்ளே பைலட்டுடன் அமர்ந்திருந்த கோ பைலட் சீட் பெல்ட்டுடன் பறந்து ஜன்னலுக்கு உள்ளே விமானத்தில் பாதி உடலும், விமானத்தின் வெளியே அகண்ட பால்வெளியில் மீதியுடலுமாக கந்தர்வர்களைப் போல பறந்திருக்கிறார். அவருடன் இருந்த பைலட் தனது சகாவின் உயிரைக் காப்பாற்ற கடுமையாக முயற்சித்தும் பலனில்லை. இந்த அதிர்ச்சியிலும் அவரைக் கொஞ்சம் ஆசுவாசமடையச் செய்தது அவரது சீட் பெல்ட்டாகத் தான் இருந்திருக்கக் கூடும். ஆம், அதன் உதவியால் தான் மனிதர் இப்போது உயிருடன் இருக்கிறார் எனக்கூறுகின்றன சீன ஊடகங்கள்.

உயிர் பிழைத்த கோ பைலட் இவர் தான்....

திங்களன்று 119 பயணிகளுடன் பயணித்த சீனாவின் சிஸ்வான் ஏர்லைன்ஸ் விமானத்தின் விண்ட் ஷீல்டு உடைந்து பைலட் மற்றும் கோ பைலட்டுகள் இப்படி உயிராபத்தில் மாட்டிக் கொள்வது இது முதல்முறையல்ல. மூன்றாவது முறை என சுட்டிக் காட்டுகின்றன சீன ஊடகங்கள்.

Image courtesy: Lehren news.com, yahoo animation news.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com