சர்ச்சைக்குரிய ‘மீஷா’ நாவலுக்குத் தடை இல்லை உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

மீஷா நாவலைப் பொறுத்தவரை இந்து மத நம்பிக்கைகளைக் குலைப்பதாகவும். இந்துப் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை பாலியல் தேவைகளைக் காரணம் கட்டி கேவலமாகச் சித்தரித்து  எழுதப் பட்டிருப்பதால்
சர்ச்சைக்குரிய ‘மீஷா’ நாவலுக்குத் தடை இல்லை உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

மீஷா என்பது சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த சர்ச்சைக்குரிய நாவல்களில் ஒன்று. முதலில் தொடராக மாத்ருபூமி வார இதழில் வெளிவந்தது இந்நாவல். தொடராக வெளிவந்த காலத்தில் மலையாள இந்துத்வா அமைப்புகளிடையே கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளானது. கேரள பாஜகவினர் முதல் யோக ஷேம சபா, ஹிந்து ஐக்கிய வேதி அமைப்பு, என் எஸ் எஸ் உள்ளிட்ட மலையாள அமைப்புகள் மாத்ருபூமியில் வெளிவந்த இத்தொடரை தடை செய்யக்கோரி போராடவே நாவலின் ஆசிரியரான மலையாள அறிமுக எழுத்தாளர் எஸ்.ஹரி மாத்ருபூமியில் எழுதுவதை நிறுத்தி விட்டு தொடரை முழுவதுமாக முடித்து புத்தகமாக்கி வெளியிட்டார். 

மீஷா நாவலைப் பொறுத்தவரை இந்து மத நம்பிக்கைகளைக் குலைப்பதாகவும். இந்துப் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை பாலியல் தேவைகளைக் காரணம் கட்டி கேவலமாகச் சித்தரித்து  எழுதப் பட்டிருப்பதால் கேரள இந்துத்வ அமைப்பினர் ஒன்றாகத் திரண்டு அந்நாவலைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்துப் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் போது குளித்து அழகாக ஆடை உடுத்திச் செல்வது தங்களது பாலியல் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் என்று மீஷா நாவலின் கதையாக்கம் சொல்கிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயிலுக்குச் செல்லாமல் தவிர்ப்பதின் காரணம் அச்சமயங்களில் கூடல் தவிர்க்கப்பட்டிருப்பதால் தான் என்றெல்லாம் நாவலின் போக்கு சொல்வதால் கேரள் இந்துக்கள் ஒட்டுமொத்தமாகக் கொதித்து எழுந்து நாவலுக்கு தடை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் ‘மீஷா’ நாவலுக்கு எதிரான மனு விசாரணைக்கு வருகையில், ‘எழுத்தாளர்களை சுதந்திரமாக இயங்க விடுங்கள்.’ நாவலைத் தடை செய்தால் அது கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதாக ஆகும்; என்று கூறி உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com