மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இன்ஸ்டாகிராம் லைக்ஸ், கமெண்ட்ஸ்க்காக இப்படியா உயிரைப் பணயம் வைத்து ஃபோட்டோ எடுப்பது?!

முட்டாள் தம்பதிகள், வெறும் விளம்பரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து ஃபோட்டோ எடுத்து வெளியிடுகிறார்கள். இனிஃபினிட்டி பூலில் புகைப்படம் எடுப்பதெல்லாம் சரி தான்

News image
Updated On :13 ஏப்ரல் 2019, 12:38 pm


கெல்லி காஸ்டில் & கொடி வொர்க்மேன்... இவர்கள் யாரென்று பார்க்கிறீர்களா? இருவரும் இன்ஸ்டாகிராமின் பாப்புலர் தம்பதிகள். அடிக்கடி விவகாரமாக ஃபோட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்குகளையும், கமெண்டுகளையும், ஷேரிங்குகளையும் அள்ளுவதில் மிகுந்த போதை கொண்டவர்கள் இத்தம்பதியினர். சமீபத்தில் பாலித்தீவுக்கு விடுமுறைக் கொண்டாட்டதுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே இவர்கள் தங்கியிருந்த விடுதியின் பிரம்மாண்டமான ஸ்விம்மிங் பூல் இயற்கை அளித்த கொடையாக ஒரு மலைப்பாங்கான பிரதேசத்தின் உச்சியில் திறந்து கிடந்தது. அந்த ஸ்விம்மிங் பூல் விளிம்பில் தண்ணீருக்குள் கோடி வொர்க்மேன் நின்று கொண்டு மனைவி கெல்லியை ஸ்விம்மிங் பூலுக்கு வெளியே தன் இரு கைகளையும் நீட்டித் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அப்பட்டமாகச் சொல்வதென்றால் பிகினி உடையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மனைவியை முழங்கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார் கோடி. இந்தப் புகைப்படத்தை இவர்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்தது தான் தாமதம் ஒரேயடியாகக் கண்டனங்களும், விமர்சனங்களும் மலை போலக் குவியத் தொடங்கி விட்டது.

Story image

முட்டாள் தம்பதிகள், வெறும் விளம்பரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து ஃபோட்டோ எடுத்து வெளியிடுகிறார்கள். இனிஃபினிட்டி பூலில் புகைப்படம் எடுப்பதெல்லாம் சரி தான் ஆனால், இவர்களை அப்படியே காப்பி அடிக்கும் பிற இளையதலைமுறையினருக்கு இவர்கள் மோசமான பாதையை அல்லவா காட்டுகிறார்கள். அதை என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பி அவர்களைத் திட்டிக் குவித்திருக்கிறார்கள். 

Story image

இத்தனைக்கும் தம்பதியின் கூலான பதில் என்ன தெரியுமா? ‘அட நாங்கள் ஒன்றும் பப்ளிசிட்டிக்காக இதைச் செய்யவில்லை. தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விட்டுத்தான் இந்தப் புகைப்படத்தையே எடுத்தோம். அத்துடன் நாங்கள் நின்றிருந்தது ஒன்றும் அந்தரம் இல்லை. கீழே இன்னொரு ஸ்விம்மிங் பூல் இருந்தது. ஃபோட்டோவின் அழகியலுக்காக நாங்கள் அதை வெட்டி நீக்கியிருந்தோம். அதையும் சேர்த்துப் பார்த்திருந்தால் ஃபாலோயர்கள் எங்களை இத்தனை விமர்சித்திருக்க மாட்டார்கள்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

சரி தான்...

என்ன விளக்கம் கொடுத்த போதும் இவர்கள் செய்த காரியம் ஐயய்யோ ரகமாகத்தான் இருக்கிறது. 
 

Related Article

பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய மனித குலப் படிமங்கள்!

மோடியை மயக்கிய ‘கிர்னார் சிங்கம்’!

தாமஸ் குக் VS எமிலி: பெண்களின் உடை விஷயத்தில் கடைசியில் கட்டுப்பெட்டி இந்திய சிந்தனை வென்றது!

கிருஷ்ணர் பூமியில் அவதரித்த போது சாட்ஷாத் அச்சு அசலாக இப்படித்தான் இருந்தாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.